Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய இறையாண்மைக்கு ஊடகங்கள் சவாலாக இருக்கிறது: எஸ்.ஆர்.சேகர்!

இந்திய இறையாண்மைக்கு ஊடகங்கள் சவாலாக இருக்கிறது: எஸ்.ஆர்.சேகர்!
X

ThangaveluBy : Thangavelu

  |  6 March 2022 12:56 PM GMT

இந்தியாவின் இறையாண்மைக்கு ஊடகங்கள் சவாலாக இருக்கிறது என்று பாஜக பிரமுகர் எஸ்.ஆர்.சேகர் பரபரப்பாக கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த 11வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். குறிப்பாக உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து அனைவரையும் மத்திய வெளியுறவுத்துறை மீட்டுள்ளது. இதற்கு உலகம் முழுவதும் பெரிதும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் உக்ரைனில் போர் நடைபெறும் சில நகரங்களில் இன்னும் ஒரு சில இந்தியர்கள் மீட்கப்படாமல் உள்ளனர். அது போன்றவர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொள்கிறது. ஆனாலும் இந்தியாவில் உள்ள ஒரு சில ஊடகங்கள் தேவையின்றி மாணவர்களை மீட்கவில்லை என்ற பொய்யான தகவலை நாட்டு மக்களிடம் கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக பாஜக பிரமுகர் எஸ்.ஆர்.சேகர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: வெகுதூரம் நடந்து வந்தவர்கள், நோயாளிகள், பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கி இந்தியர்களை அழைத்து வருகிறது மத்திய அரசு. யாரோ இரு மாணவர்கள் பாகுபாடு பார்க்கிறார்கள் என அறிவிலித்தனமாக சொல்ல அதை கையில் எடுத்து ஊதி பெரிதாக்கும் ஊடகங்கள் நம் நாட்டின் இறையாண்மைக்கு சவாலாக இருக்கின்றன. இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Twiter

Image Courtesy: Hindu Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News