முதலமைச்சர் சொன்னா பதவியை வி.சி.க.வுக்கு விட்டுக்கொடுக்கனுமா: தி.மு.க. பேரூராட்சி பெண் தலைவர்!
By : Thangavelu
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருக்கிறார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட பெ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு என்று ஒதுக்கப்பட்டது. அதன்படி தலைவர் பதவிக்கு சின்னவேடி என்பவர் போட்டியிட்டார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் திமுக மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி மற்றும் நகர செயலாளர் உதயகுமார் உள்ளிட்ட சிலர் ஆதரவுடன் சாந்தி வெற்றியடைந்தார்.
இதே போன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் ஸ்டாலினிடம் அதிருப்தி தெரிவித்தார். நீங்கள் செய்வதா சரியா என்ற கோரிக்கையும் முன்வைத்தார். இதன் பின்னர் திமுக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்றவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்னைக்கு வந்து தன்னை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருந்தார். ஆனால் அதனை திமுகவினர் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில், பெ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் சாந்தி தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது பற்றி விசிகவினர் மாவட்ட பொறுப்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பழனியப்பனிடம் முறையிட்டும் எந்த ஒரு முடிவும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
Source, Image Courtesy: Dinamalar