சித்ரா ராமகிருஷ்ணன் கைதுக்கு கருத்து தெரிவிக்க முடியவில்லையா? ப.சிதம்பரத்துக்கு பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் கேள்வி!
By : Thangavelu
தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் கடந்த 2013 ஏப்ரல் மாதம் முதல் 2016 டிசம்பர் மாதம் வரை பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணன்.
இதனிடையே தனது பதவிக்காலங்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்று சித்ரா ராமகிருஷ்ணன் மீது குற்றம்சாட்டப்பட்டது. அது மட்டுமின்றி தேசிய பங்குச்சந்தையின் ரகசியங்களையும் வெளியிட்டுள்ளார். இது பற்றி சிபிஐ விசாரணை நடத்தியதில் அவரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது.
மோசடி வழக்கில் தேசிய பங்கு சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்காமல் உள்ளாரே? ஏன்? கருத்து தெரிவிக்க முடியவில்லையா? கருத்தே இல்லையா?
— Narayanan Thirupathy (@Narayanan3) March 7, 2022
இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணன் கைது பற்றி தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது; மோசடி வழக்கில் தேசிய பங்கு சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்காமல் உள்ளாரே? ஏன்? கருத்து தெரிவிக்க முடியவில்லையா? கருத்தே இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Source, Image Courtesy: Twiter