எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்குகளில் வெளியிடக்கூடாது - எச்சரிக்கை விடுத்த பா.ம.க

By : Mohan Raj
சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தை வெளியிடக்கூடாது என கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு பா.ம.க சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரிக்கும் விதமாக காட்சி அமைப்பு வைத்திருந்ததற்கு 'பாட்டாளி மக்கள் கட்சி' மற்றும் வன்னியர் சங்கங்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர், இதற்கு நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர் ஆனால் நடிகர் சூர்யா மன்னிப்பு கோரவில்லை.
இந்நிலையில் தற்பொழுது நடிகர் சூர்யா நடிக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது, இந்நிலையில் நடிகர் சூர்யா நடித்த படத்தை வெளியிடக் கூடாது என திரையரங்கு உரிமையாளர்களுக்கு பா.ம.க சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "திரைப்பட நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் அந்தோணிசாமி என்ற தலித் கிறிஸ்துவரை குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் வன்னியராக சித்தரித்து வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தி மொத்த வன்னியர் சமுதாய மக்கள் ஜாதி வெறி வன்மம் உள்ளவர்கள் போல் காட்டிய ஜெய்பீம் நடிகர் சூர்யா வன்னிய மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காத வரை கடலூர் மாவட்டத்தில் 'எதற்கும் துணிந்தவன்' படத்தை ஒளிபரப்ப அனுமதிக்கக்கூடாது என பாட்டாளி மக்கள் சார்பாகவும் வன்னியர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
Source -
