Kathir News
Begin typing your search above and press return to search.

கடத்தல் பொருட்களை தாங்கி சென்ற பாகிஸ்தானின் ட்ரோன் இந்திய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டது

கடத்தல் பொருட்களை தாங்கி சென்ற பாகிஸ்தானின் ட்ரோன் இந்திய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டது
X

Mohan RajBy : Mohan Raj

  |  8 March 2022 6:30 AM IST

பாகிஸ்தானின் பெரோஸ்பூர் செக்டாரில் சர்வதேச எல்லைகள் 4 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பொருட்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டு வீழ்த்தினர்.


அதிகாலை 3 மணியளவில் கண்காணிப்பில் உள்ள வீரர்கள் சிறிதளவு சத்தத்தை உணர்ந்தனர், அந்த சத்தம் கேட்ட திசையை ஆராய்ந்த பொழுது அது ஒரு ஆளில்லா விமானம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதில் தோலில் செய்யப்பட்ட ஒரு சிறிய வகை பச்சை நிற பை இணைக்கப்பட்டுள்ளது என கண்டறிந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அந்த விமானத்தை உடனடியாக சுட்டு வீழ்த்தினர்.


பின்னர் அந்த விமானத்தை ஆராய்ந்து பார்க்கும் பொழுது ஒரு சிறிய பச்சை நிறப்பை அடைக்கப்பட்டிருப்பதையும், அதில் மஞ்சள் நிறத்தில் நான்கு பாக்கெட்டுகள் கருப்பு நிறத்தில் இருந்ததாகவும் எல்லை பாதுகாப்பு படையினர் கூறினர் , அதை ஆராய்ந்து பார்த்த பொழுது சந்தேகத்துக்கிடமான சுமார் 4.17 அளவு கிலோ அளவுள்ள கடத்தல் பொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது. அந்த ஆளில்லா விமானத்தின் மாடல் DJI Matrice 300 RTX என கண்டறியப்பட்டுள்ளது.



Source - Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News