Kathir News
Begin typing your search above and press return to search.

உத்திரபிரதேசத்தில் யோகியே மீண்டும் முதல்வர் - கட்டியம் கூறிய கருத்துக்கணிப்புகள்

உத்திரபிரதேசத்தில் யோகியே மீண்டும் முதல்வர் - கட்டியம் கூறிய கருத்துக்கணிப்புகள்
X

Mohan RajBy : Mohan Raj

  |  8 March 2022 5:00 PM IST

உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க அரசு ஆட்சியை பிடிக்கும் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராவார் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறிவிட்டன.


உத்தரபிரதேசத்தில் ஏழாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் 5 மாநிலங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. கோவா, மணிப்பூர், பஞ்சாப் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் கருத்துக்கணிப்புகளை பார்க்கும்பொழுது உத்தரப்பிரதேச சட்டமன்றம் 403 சட்டமன்ற தொகுதிகளை உடையது இதில் பாஜக கூட்டணி 288 முதல் 326 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் யோகி ஆதித்யநாத் முதல்வராக வருவதற்கு வாய்ப்புகள் நிறையவே பிரகாசமாக காணப்படுகிறது.


கணிக்கப்பட்ட வாக்குகளில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு 46 சதவீதமும் சமாஜ்வாதி கட்சிக்கு 36 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது, இது இவ்வாறு இருக்கையில் எதிர்க்கட்சிகள் இந்த கருத்துக் கணிப்புகள் பொய்யானவை என கூறி வருகின்றனர். ஆனால் பெரும்பான்மையான ஊடகங்கள் மீண்டும் யோகியே முதல்வராவார் என இப்பொழுதே கூறிவிட்டனர். இன்னும் இரு தினங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Source - Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News