Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டவிரோதமாக வீட்டுக்கு கழிவுநீர் குழாய் அமைத்த தி.மு.க. கவுன்சிலர்: குடிநீர் வாரியத்தின் அதிரடி நடவடிக்கை!

சட்டவிரோதமாக வீட்டுக்கு கழிவுநீர் குழாய் அமைத்த தி.மு.க. கவுன்சிலர்: குடிநீர் வாரியத்தின் அதிரடி நடவடிக்கை!
X

ThangaveluBy : Thangavelu

  |  9 March 2022 7:52 AM GMT

சென்னையில் கட்டணம் செலுத்தாமல் மாநகராட்சி சாலையை துண்டித்து தனது வீட்டுக்கு கழிவுநீர் குழாய் அமைத்த திமுக கவுன்சிலருக்கு குடிநீர் வாரிய அதிகாரிகள் உடனடியாக முறைகேடான இணைப்பை துண்டித்து எச்சரிக்கை செய்துள்ளனர்.

சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறறு முடிந்து கவுன்சிலர்கள் அனைவரும் பதவியேற்றுக்கொண்டனர். அதே போன்று திமுக கவுன்சிலர்கள் பதவி ஏற்றதில் இருந்து தங்களுடைய வேலைகளை காண்பிக்க ஆரம்பித்துள்ளனர். அதே போன்று சென்னை மாநகராட்சியின் மாதவரம் மண்டலம் 30வது வார்டில் திமுகவை சேர்ந்த துரைசாமி வெற்றி பெற்றுள்ளார். அவர் தற்போது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அதாவது அவரது வீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை குடிநீர் வாரிய அனுமதியின்றி எவ்வித கட்டணமும் செலுத்தாமல் கழிவுநீர் இணைப்புக்கான குழாய் அமைத்துள்ளார். அது மட்டுமின்றி சுமார் 15 அடி நீளத்திற்கு சாலையை வெட்டி சேதப்படுத்தியுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் திமுக கவுன்சிலர் துரைசாமியிடம் விசாரணை நடத்தினர். எப்படி அனுமதி பெறாமல் நீங்களே பணியை செய்துள்ளீர்கள். இது போன்ற தவறு செய்ததற்கு உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தாக கூறப்படுகிறது.

அதற்கு துரைசாமி நான் கவுன்சிலர் என்னிடமே சட்டம் பேசுகின்றீர்களா, உங்களை சும்மா விட மாட்டேன் என்று எச்சரிக்கை செய்துள்ளார். இதனை காதில் வாங்காத அதிகாரிகள் குழாய் இணைப்பை துண்டித்து, சாலையை சீரமைத்துள்ளனர். திமுக கவுன்சிலர்களாக பதவியேற்று ஒரு வாரத்தை தாண்டவில்லை அதற்குள் தங்களது வேலைகளை ஆரம்பித்துள்ளார்கள் என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

Source: Dinamalar

Image Courtesy: Hindustan Times

Next Story
கதிர் தொகுப்பு
Trending News