Kathir News
Begin typing your search above and press return to search.

ஐந்து வருடங்களில் எகிறிய பா.ஜ.க'வின் வாக்கு சதவீதம் - இந்தியாவின் ஒரே அரசியல் சக்தி பா.ஜ.க'தான்!

ஐந்து வருடங்களில் எகிறிய பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் - இந்தியாவின் ஒரே அரசியல் சக்தி பா.ஜ.கதான்!

Mohan RajBy : Mohan Raj

  |  11 March 2022 12:00 PM GMT

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க'வின் வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது, இதுதொடர்பாக மாநிலங்கள் வாரியாக பா.ஜ.க வாங்கிய வாக்குகளை வைத்து பார்க்கும் பொழுது முன்பு இருந்ததைவிட பா.ஜ.க'வின் வாக்கு வங்கியில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது தெரியவந்துள்ளது.


உத்திரப்பிரதேசத்தில் பா.ஜ.க'வின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது.


உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க 255 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் 202 இடங்களைப் பெற்றது, கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க 312 இடங்களைப் பெற்றிருந்தது ஆனல் பா.ஜ.க'வின் இடங்கள் குறைந்தாலும் 2017 முதல் 2022 வரை ஒப்பிடும் போது மாநிலத்தில் பா.ஜ.க'வின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.





குறிப்பாக கடந்த 2011 ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி மாநிலத்தில் மொத்தம் 3,44,03,299 வாக்குகளுடன் பா.ஜ.க 39.67 % வாக்குகளைப் பெற்றது, ஆனால் 2022-ல் தேர்தல் கமிஷன் அறிக்கையின்படி பா.ஜ.க'வின் ஓட்டு சதவிகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது, அந்தவகையில் 39.67% வாக்குகளிலிருந்து 41.3% வாக்குகளாக அதிகரித்துள்ளது.


மணிப்பூரில் பா.ஜ.க'வின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.


2020'ல் மணிப்பூர் பா.ஜ.க 32 இடங்களை பெற்றுள்ளது, ஆனால் கடந்த 2017 ம் ஆண்டு பா.ஜ.க 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது, மணிப்பூரில் பாரதிய ஜனதா தனது வாக்கு சதவீதத்தை மட்டுமின்றி இடங்களையும் அதிகரித்துக் கொண்டது. 2017'ல் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி பா.ஜ.க 36.8 % வாக்குகளை பெற்றிருந்தது ஆனால் தற்போதைய 2022 தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அறிக்கைப்படி பா.ஜ.க'வின் வாக்கு சதவிகிதம் 36.2 % லிருந்து 37.8 % மாக உயர்ந்துள்ளது.


கோவாவிலும் பா.ஜ.க'வின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.


2002 தேர்தலில் கோவாவில் 20 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க கடந்த 2017'ம் ஆண்டின் போது 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கோவாவில் பா.ஜ.க தனது இடங்களை 13 லிருந்து 20 ஆக அதிகரித்தது மட்டுமின்றி வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அந்தவகையில் பார்த்தோமேயானால் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின் படி 2017'ல் 32.48% இருந்த பா.ஜ.க'வின் வாக்கு வங்கி 33.3% மாக அதிகரித்துள்ளது.


பஞ்சாபின் அதிகரித்துள்ள பா.ஜ.க'வின் வாக்கு சதவிகிதம்


கடந்த 2011 ஆம் ஆண்டில் பா.ஜ.க பஞ்சாபில் மூன்று இடங்களை வென்றது அது 2022-ல் அது இரண்டாக குறைந்துள்ளது, இருப்பினும் பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க தனது வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது, 5.39% எண்ணிக்கையிலிருந்து தற்பொழுது 2022-ல் பஞ்சாபில் தனது வாக்கு சதவீதத்தை பா.ஜ.க 6.60% உயர்த்தி உள்ளது.


இந்த நான்கு மாநிலங்களில் பா.ஜ.க தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்தாலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டும் பா.ஜ.க'வால் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முடியவில்லை, கடந்த 2017'ல் பாஜக 57 இடங்களில் வெற்றி பெற்றது அந்த எண்ணிக்கை 2022 47 இடங்களாக குறைந்துள்ளது. வாக்கு சதவீதத்தை பொருத்தவரையில் 2017 46.51% வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க 2022 44.33% என குறைந்துள்ளது.


மொத்தமாக ஐந்து மாநிலங்களையும் வைத்து பார்த்தோமேயானால் பா.ஜ.க'வின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News