Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்த யோகி ஆதித்யநாத் - வரலாற்றுச் சம்பவங்கள்

தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்த யோகி ஆதித்யநாத் - வரலாற்றுச் சம்பவங்கள்
X

Mohan RajBy : Mohan Raj

  |  11 March 2022 4:15 PM IST

தமிழர்களுக்காகவும், தமிழர் நலனுக்காகவும், உலகில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு தொடர்ச்சியாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குரல் கொடுத்துள்ளார் என்பது தற்போது வரலாற்றுச் சம்பவங்களை திருப்பிப் பார்க்கும்போது தெரிகிறது.


நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் உத்திரப்பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க பெரும்பான்மையான வெற்றி பெற்று மீண்டும் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக அங்கு பொறுப்பேற்கிறார், இந்நிலையில் யோகி ஆதித்யநாத் குறித்து தமிழகத்தில் சிலர் அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து குரல் கொடுத்தது தெரிய வந்துள்ளது.


கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட பொழுது பாராளுமன்றத்தில் அதற்காக குரல் எழுப்பியவர் யோகி ஆதித்யநாத். மலேசியாவில் உள்ள இந்திய இனத்தவர்களின் அமைதியின்மை விவகாரம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம் எழுப்பியது, ஆனால் அப்பொழுது நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி இந்த பிரச்சினையை விவாதிக்க மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் கீழ் அவை நடவடிக்கைகளை முடக்கி வைப்பதற்கு முன்வந்தனர். அப்பொழுது அதற்கு பதிலாக "நாங்கள் மிகவும் பொறுப்புள்ள ஜனநாயக நாடு, நாங்கள் வேற எந்த நாட்டையும் பற்றி விவாதிப்பதில்லை" என சட்டர்ஜி கூறியது குறிப்பிடத்தக்கது.

Source - www.taiwannews.com.

ஆனால் அப்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத், "இந்த இனத்தை பாதுகாக்க மலேசிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மலேசியாவில் பல கோவில்கள் இடிக்கப்பட்டு உள்ளது குறித்தும்" அப்பொழுது யோகி ஆதித்யநாத் பேசியது குறிப்பிடத்தக்கது. ஆளும் தி.மு.க'வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தமிழர்களுக்காக குரல் கொடுக்க முடியாத பொழுது அப்பொழுதே சட்டமன்ற உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத் குரல் கொடுத்ததும் நினைவுகூறத்தக்கது.

Source - Amendment

மேலும் இன்னொரு நிகழ்வில் கடந்த 2013 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் யஷ்வந்த் சின்ஹா அவர்களோடு இணைந்து யோகி ஆதித்யநாத் ஒரு கேள்வியை எழுப்பினார். அதில், "இலங்கை தனது மாகாணங்களுக்கான சுயாட்சியை உறுதி செய்வதற்காக தனது அரசியலமைப்பில் திருத்தி அமைப்பது அளித்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன இது குறித்து இந்தியா தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளதா?" எனவும் கேள்வி எழுப்பினார். அதாவது இலங்கை தமிழர்களுக்கு எதிராக சுய ஆட்சியை கடைபிடிக்கும் பொழுது இந்தியா அதனை எதிர்த்தது ஏன் எதிர்க்கவில்லை என்பது போன்ற கேள்வியை அவர் 2013'ம் ஆண்டு எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source - Lok sabha Media Center

மேலும் கடந்த 2014'ம் ஆண்டில் இலங்கை தமிழர்கள் மீதான உரிமை மீறல்கள் பற்றி பற்றி கேள்வி எழுப்பி பாராளுமன்றத்தில் யோகி ஆதித்யநாத் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் 23/7/2014 ஆம் ஆண்டு அன்று நாடாளுமன்றத்தின் தனது கேள்வி நேரத்தின்போது எழுப்பிய கேள்வி முக்கியமானது, "இலங்கையிலுள்ள தமிழ் வம்சாவளி குடிமக்கள் தொடர்பான மனித உரிமை உரிமை மீறல் வழக்குகள் அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்துள்ளது" என்பதும், "இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பிற்காக தமிழர்களின் நலனுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்பதையும்" பாராளுமன்றத்தில் தமிழர்களின் நலனுக்காக குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பினார்.

Source - k News

மேலும் மற்றொரு நிகழ்வில் 2015'ம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதியன்று இலங்கை அதிபர் தமிழக எல்லை தாண்டி மீன் பிடித்தால் சுடுவோம் என்று கூறினார் அதற்கு பாராளுமன்ற விவாதத்தில் கண்டனம் தெரிவித்து பேசியதோடு மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் இந்தியர்கள் மீதும் தமிழர்கள் மீதும் கை வைக்கும் உரிமை இல்லை என்பது என்ற விவகாரத்தையும் பாராளுமன்ற வளாகத்தில் யோகி ஆதித்யநாத் பதிவு செய்துள்ளார்.


தற்பொழுது அவர் உத்தரப்பிரதேசத்தின் இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையிலும் அவரின் வரலாற்றுச் சுவடுகளை எடுத்துப் பார்த்தால் உத்தரப்பிரதேச மக்களுக்கு மட்டுமின்றி எப்பொழுதெல்லாம் இந்தியா, இந்தியர்கள், தமிழர்கள் என்ற பிரிவினைவாதங்க குரல் எழுகிறதோ?, இந்தியர்களை வெளியில் எங்காவது யாராவது துன்புறுத்தல் ஏற்படுத்தினாலும் அதற்கெல்லாம் அவர் குரல் எழுப்பி உள்ளார் என்பது இதுபோன்ற சம்பவங்கள் மூலம் தெளிவாகிறது யோகி ஆதித்யநாத் அரசியல்வாதி மட்டுமல்ல ஆன்மீகவாதியும் கூட என்பது இந்தத் தருணத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டியது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News