Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.வுக்கு சிறுபான்மையினர் ஆதரவு அமோகம்: வேலூர் இப்ராஹிம் பெருமிதம்!

பா.ஜ.வுக்கு சிறுபான்மையினர் ஆதரவு அமோகம்: வேலூர் இப்ராஹிம் பெருமிதம்!

ThangaveluBy : Thangavelu

  |  12 March 2022 10:53 AM GMT

பாஜகவை விமர்சனம் செய்கின்றவர்களுக்கு பதிலடி கொடுக்கின்ற வகையில் சிறுபான்மையின மக்கள் அதிகம் பேர் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர் என்று வேலூர் இப்ராஹிம் கூறியுள்ளார்.

இது குறித்து பாஜகவின் சிறுபான்மையின பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறியிருப்பதாவது: 4 மாநிலங்களில் சிறுபான்மையின மக்கள் அதிகளவு பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். அதாவது மணிப்பூரில் 52 சதவீதம் சிறுபான்மையின மக்கள் ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று உபியில் 25 சதவீத சிறுபான்மையின மக்களில் 20 சதவீதம் பேர் பாஜகவை ஆதரித்துள்ளனர். கோவாவில் 30 சதவீத சிறுபான்மையின மக்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர். எப்போதும் பாஜகவை மதவாத கட்சி என்று விமர்சனம் செய்பவர்களுக்கு இத்தேர்தல் முடிவுகள் பதிலடி கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinamalar

Image Courtesy: BBC

Next Story
கதிர் தொகுப்பு
Trending News