மாணவர்களை பத்திரமாக மீட்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் நன்றி!
By : Thangavelu
உக்ரைனில் உள்ள மாணவர்களை பத்திரமாக மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் மூலமாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது கடந்த மாதம் மார்ச் 24ம் தேதி ரஷ்ய படைகள் தாக்குதலை தொடர்ந்தது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினரை மீட்கும் பணிகள் நடைபெற்றது. அதில் இந்திய அரசு அனைவரையும் விமானப்படை விமானத்தை அனுப்பி மீட்டு வந்தது. இதற்காக பிரதமர் மோடி ரஷ்ய மற்றும் உக்ரைன் அதிபர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெருக்கடி மிகுந்த சூழலுக்கிடையே நம் மாணவர்கள் அனைவரையும் விரைவாக மீட்க உதவிய வெளியுறவுத்துறை அமைச்சர் @DrSJaishankar, இரவுபகல் பாராமல் உழைத்த தமிழ்நாடு அரசின் குழுவைச் சேர்ந்த சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். pic.twitter.com/LwiCWs6D7g
— M.K.Stalin (@mkstalin) March 12, 2022
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த கடைசி மாணவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்றார். இது பற்றி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நெருக்கடி மிகுந்த சூழலுக்கிடையே நம் மாணவர்கள் அனைவரையும் விரைவாக மீட்க உதவிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இரவு, பகலாக பாராமல் உழைத்துள்ளார். அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twiter