Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசு மீட்ட மாணவர்களின் கட்டண செலவை ஏற்பதாக கூறும் ஸ்டாலினுக்கு குற்ற உணர்வோ, தயக்கமோ இருந்ததில்லை! - அண்ணாமலை!

மத்திய அரசு மீட்ட மாணவர்களின் கட்டண செலவை ஏற்பதாக கூறும் ஸ்டாலினுக்கு குற்ற உணர்வோ, தயக்கமோ இருந்ததில்லை! - அண்ணாமலை!
X

ThangaveluBy : Thangavelu

  |  14 March 2022 9:39 AM IST

உக்ரைனில் சிக்கியிருந்த மாணவர்களை கட்டணமின்றி இலவசமாக மத்திய அரசு மீட்டுள்ளது. கடமை உணர்வுடன் மிகவும் மனிதாபிமான முறையில் செயல்படுத்திக் காட்டியுள்ள பிரதமர் மோடிக்கு நன்று என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உக்ரைன் மீது ரஷ்யா படைகள் தாக்குதலுக்கு முன்னரே மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தை அறிமுகம் செய்து அதன் மூலம் இந்திய மாணவர்களை மீட்டது. அதற்கு முன்பே அனைத்து மாணவர்களும் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும் என்றும் சுற்றறிக்கையும் மத்திய அரசு அனுப்பியிருந்தது.

மேலும், மாணவர்கள் அனைவரையும் இலவசமாக விமானங்களை அனுப்பி மீட்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டார். அதாவது கடமை உணர்வுடனும், மனிதாபிமான முறையிலும் செயல்படுத்திய பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவிக்கிறோம். அதே சமயம் 6வது விமானம் வந்த பின்னர் தமிழக மாணவர்களின் பயண கட்டணசெலவை ஏற்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார். இது போன்று மிகவும் உப்புச் சப்பில்லாத அறிவிப்புகளை வெளியிடுவதற்கு கொஞ்சம் கூட குற்ற உணர்வுகளோ அல்லது தயக்கமோ அவருக்கு இருந்ததில்லை. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தான் லேபிள் ஒட்டும் வேலையை மட்டும்தான் பார்த்து வருகின்றனர். அவர்கள் எவ்வித பணியையும் செய்யவில்லை என்று தனது அறிக்கை மூலமாக கூறியுள்ளார்.

Source: Dinamalar

Image Courtesy: News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News