Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தான் ஏவுகணை விவகாரம் - பாராளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் கூறியது என்ன?

பாகிஸ்தான் ஏவுகணை விவகாரம் - பாராளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் கூறியது என்ன?
X

Mohan RajBy : Mohan Raj

  |  15 March 2022 7:15 PM IST

பாகிஸ்தான் மியான்கன்னு நகரில் ஏவுகணை தவறாக விழுந்ததற்கு இன்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.


கடந்த 9'ம் தேதி இந்திய ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் பகுதியில் பராமரிப்பு பணியின் போது தொழில்நுட்பகோளாறு காரணமாக தவறாக விழுந்தது, இது குறித்து ராணுவ அமைச்சகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிவித்தது, ஆனாலும் இந்த நிமிடம்வரை பாகிஸ்தான் தரப்பு இதனை ஏற்கவில்லை.


இந்நிலையில் ஏவுகணை விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "பாகிஸ்தானின் மியான்கன்னு நகரில் ஏவுகணை தவறுதலாக விழுந்தது, இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை! இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயுத அமைப்புகளின் பாதுகாப்பு விஷயத்தில் அரசாங்கம் அதிக முன்னுரிமை அளிக்கிறது நமது ஏவுகணை அமைப்பு மிகவும் பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது" எனவும் தெரிவித்தார்.


ஆனாலும் இந்த ஏவுகணை விவகாரத்தில் பல சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News