Kathir News
Begin typing your search above and press return to search.

ஹிஜாப் தீர்ப்பு - கர்நாடக முதல்வர் கூறிய பரபரப்பு கருத்து

ஹிஜாப் தீர்ப்பு - கர்நாடக முதல்வர் கூறிய பரபரப்பு கருத்து
X

Mohan RajBy : Mohan Raj

  |  15 March 2022 7:45 PM IST

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என ஹிஜாப் விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கருத்து தெரிவித்துள்ளார்.


இந்திய அளவில் பேசுபொருளாக மாறியுள்ள ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஹிஜாபுக்கு எதிரான சரியான முகாந்திரங்கள் முன்வைக்கப்படவில்லை, எனவே ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அவசியம் இல்லை" என கூறி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர்.


இந்நிலையில் இது குறித்து கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை கருத்து கூறும் பொழுது, "இது மாணவர்களின் எதிர்காலம் குறித்த பிரச்சினை அதனால் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் சீருடை அணிய பரிந்துரைக்கப்படுகிறது ஒரு நியாயமான கட்டுப்பாடுதான் அதனை மாணவர்கள் யாரும் எதிர்க்க முடியாது என கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது அமைதியும், நல்லிணக்கமும் பாதுகாக்கப்பட வேண்டும் அதனால் கீழ் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அனைத்து அதிகாரிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என வேண்டுகோள் விடுக்கிறேன் என கூறியுள்ளார்.


மேலும் ஹிஜாப் தீர்ப்பை வரவேற்று பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "மாணவர்களின் வேலை படிப்பதுதான் இதனால் இதையெல்லாம் விட்டுவிட்டு அவர்கள் படித்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். உயர் நீதிமன்றம் அளித்துள்ள இந்த உத்தரவை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்" எனவும் கூறியுள்ளார்.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News