Kathir News
Begin typing your search above and press return to search.

இனி தி.மு.க அரசை நம்பி பயனில்லை - முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்

இனி தி.மு.க அரசை நம்பி பயனில்லை - முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்
X

Mohan RajBy : Mohan Raj

  |  15 March 2022 7:30 PM IST

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக வைகை பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது.


முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் அதற்கு முன்பு உள்ள பேபி அணையை பலப்படுத்தும் பணியை தொடங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முல்லைப் பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டது.


அதன்படி மதுரை பழங்காலத்தில் இன்று முல்லைப் பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது, இதில் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


ஆனால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இதுவரை தமிழக அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என பெயரளவில் அறிக்கை மட்டுமே தமிழக அரசு சார்பில் இதுவரை விடுக்கப்பட்டுள்ளது, முதல்வர் ஸ்டாலின் தனது புத்தக வெளியீட்டு விழாவிற்கு கேரள முதல்வர் பினறாயி விஜயனை கலந்துகொள்ள செய்தார், ஆனால் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இதுவரை அறிக்கை மட்டுமே அளித்து வருகிறார் என விவசாயிகள் வெறுப்பில் உள்ளனர் இந்நிலையில்தான் விவசாய சங்கங்களின் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News