"ஒரு ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி எங்களை ரொம்ப படுத்துறார்" - மக்களவையில் விசும்பிய காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர்

By : Mohan Raj
'தமிழ்நாட்டில் ஒரு ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி அரசியல் செய்து செய்வது எங்களுக்கு டார்ச்சராக உள்ளது' என்கின்ற ரீதியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மக்களவையில் குற்றம்சாட்டியுள்ளார்.
நடந்து வரும் மக்களவை கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று பேசியதாவது, "எல்லா சிறுபான்மையினர் மரணத்தையும் அரசியலாக்கி சமூகத்தை பிளவுபடுத்தும் வேலைகளை கர்நாடகாவில் இருந்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரி தமிழகத்தில் செய்து வருகிறார்', எனவும் மரணம் எங்கு ஏற்பட்டாலும் அதில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினரை தொடர்புபடுத்தி இன அரசியல் செய்கிறார்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இதில் பிரதமர் மோடி தலையிட்டு இந்த அரசியல் செய்ய வேண்டாம் என அவரை கேட்டுக் கொள்ள வேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் பா.ஜ.க தலைமைக்கு அண்ணாமலை வந்த பிறகு தமிழக பா.ஜ.க'வின் அரசியல் வளர்ச்சி அசுர வேகத்தில் இருப்பது அனைவரும் அறிந்ததே, இந்நிலையில் பா.ஜ.க'வின் வளர்ச்சி பிடிக்காமலும் தங்கள் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியை பொறுக்க முடியாமலும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இன்று மக்களவையில் "ஐயா அண்ணாமலை செய்யும் அரசியல் எங்களுக்கு தாங்க முடியலை" என்கிற ரீதியில் குறை சொல்லும் மணாவன் போல் கூறியது சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.
