காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலையில் முக்கிய குற்றவாளி யாசின் மாலிக் மீது நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

By : Mohan Raj
2017'ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரை சீர்குலைத்த தீவிரவாதி யாசின் மாலிக் மற்றும் அவரது கூட்டாளி 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
நீதிமன்றம் கூறியபடி, "இது ஒரு திட்டமிட்ட சதி என்றும், பெரிய அளவிலான போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பரவலான வன்முறை மற்றும் அழிவு உச்சகட்டத்தை எட்டிய குற்றச் சதி" என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் இந்திய யூனியனில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் கிரிமினல் சதித்திட்டம் தீட்டப்பட்டது என்றும், இந்த சதியை நிறைவு செய்வதற்காக பல வன்முறைச் செயல்களை செய்ததாகவும் யாசின் மாலிக் உள்ளிட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது.
மேலும் இது குறித்து நீதிமன்றம் கூறுகையில், "இது காந்திய வழியை பின்பற்றும் அமைதியான போராட்டங்களாக இருக்கவேண்டும். இருப்பினம் வன்முறையின் மூலம் அரசாங்கத்தை கட்டுப்படுத்துவதே இவர்களின் நோக்கம்" என்பதை நீதிமன்றம் குறிப்பிட்டுச் சொல்லி உள்ளது. யாசின் மாலிக் உடன் ஹபீஸ் முஹம்மது சயீத், எம்டி யூசுப் ஷா, அஃப்தாப் அஹ்மத் ஷா, அல்தாஃப் அஹ்மத் ஷா, நயீம் கான், ஃபரூக் அஹ்மத் தார், ராஜா மெஹ்ராஜூதின் கல்வால், பஷீர் அகமது பட், ஜஹூர் அகமது ஷா வதாலி, ஷபீர் அகமது ஷா, மசரத்ஆலம், அப்துல் ரஷீத் ஷேக், மற்றும் நவூரல் ஆகியோர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக உள்ளனர்.
யாசின் மாலிக்
ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீரிகளின் கொலையில் தீவிரமாக பங்கேற்றவர் இவர் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத அரசியல்வாதி ஆவார். காஷ்மீரில் தீவிரவாதியை உருவாக்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது, மேலும் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளித்தது மற்றும் இந்திய மண்ணில் தீவிரவாதத்தை வளர்த்தது. முன்னாள் முதலமைச்சரும் அப்போதைய உள்துறை அமைச்சருமான முப்தி சையதின் மகள் ருபையா'வை கடத்தியது போன்ற குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இது மட்டும் இல்லாமல் ஜனவரி 1990'ல் நான்கு விமானப்படை அதிகாரிகள் படுகொலை செய்தது மற்றும் நான்கு இந்திய விமானப் படை வீரர்களில் ஒருவரான கன்னாவை கொன்றது, பள்ளத்தாக்கில் காஷ்மீர் பண்டிட்டுகள் இனப்படுகொலையில் உள்ள பயங்கரவாத தொடர்புகள் என காஷ்மீரில் தீவிரவாதத்தை வளர்த்து அதற்கு முக்கிய குற்றவாளியாக யாசின் மாலிக் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
