Kathir News
Begin typing your search above and press return to search.

உலகத் தலைவர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்த மோடி - அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் முடிவுகள்

உலகத் தலைவர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்த மோடி - அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் முடிவுகள்

Mohan RajBy : Mohan Raj

  |  19 March 2022 11:00 AM GMT

உலகத் தலைவர்கள் மத்தியில் 77% ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.


மார்னிங் கன்சல்ட் என்ற அமெரிக்காவை துவக்கமாக கொண்ட தளத்தின் கணக்கின்படி உலகளாவிய தலைவர்கள் யார் சிறந்தவர் என்ற கணிப்பு நடத்தப்பட்டது, அதன்படி பிரதமர் நரேந்திர மோடி 77% மதிப்பீடுகளுடன் உலகின் மிகவும் பிரபலமான தலைவராக உள்ளார் என முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


ஆய்வு நிறுவனம் நடத்திய 13 தலைவர்களில் பிரதமர் மோடி 77 சதவிகிதத்துடன் முதல் இடத்திலும், மெக்சிகோவின் ஆண்ட்ரூஸ் மேனுவல் லோபஸ் 73 சதவிகிதத்துடன் 2வது இடத்திலும் உள்ளனர், இட்டாலியன் மரியோ ட்ராகி 50 சதவிகித மதிப்பீடுகள், ஜப்பானின் ஃபூமியோ கிஷிடா 145 சதவீகிதத்துடன் 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்துள்ளனர்.


இதை கடந்த ஜனவரி 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான தரவுகள் என குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த தகவல்களின் படியே பிரதமர் மோடி கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகத் தலைவர்களுடன் ஒப்பிடும்போது செயல்திறன் அடிப்படையில் முதல் இடத்தில் உள்ளார்.


உலகத் தலைவர்களில் முதல் இடத்தில் மோடி, சமீபத்திய ஆய்வில் தகவல் கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரதமர் மோடியின் மதிப்பீடு அதிகபட்சமாக 84 சதவீதத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது கடந்த 2020 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதியன்று அவரின் மதிப்பீடு மிகக்குறைவாக இருந்தது. ஆனால் நாட்டின் இரண்டாவது கொரோனா அலையின் பொழுது பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மற்ற நாட்டு தலைவர்களுடன் வைத்து ஒப்பிடுகையில் சிறப்பானதாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஆகியோரின் தர வரிசை முறையே 42% மற்றும் 41% ஆகும் மேலும் இவர்கள் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் உள்ளனர். பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் 33% சதவீதத்துடன் கணக்கிடப்பட்ட தலைவர்களில் கடைசி இடத்தை பிடித்தார்.


Source - Opindia.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News