'இஸ்லாமிய பெண்களுக்கு புர்கா தீங்கை தான் விளைவிக்கும்' - புர்கா பற்றி அம்பேத்கர் கூறியது என்ன?

By : Mohan Raj
"புர்கா அணிந்து பெண்கள் தெருக்களில் நடந்து செல்வது இந்தியாவில் காணப்பட்ட மிகவும் அருவருப்பான செயல்களில் ஒன்றாகும்" என டாக்டர் அம்பேத்கர் கூறியதை இடதுசாரிகள் மறைத்து 'அம்பேத்கார் இருந்திருந்தால் புர்காவிற்கு ஆதரவளித்திருப்பார்' என தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இடதுசாரி பிரச்சார இணையத்தளமான 'தி குயிண்ட்' சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது அதில் புர்கா ஆதரவாளர்கள் டாக்டர் அம்பேத்கரை மேற்கோள் காட்டி ஹிஜாபின் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை கண்டித்தனர் என குறிப்பிட்டுள்ளனர், கடந்த மார்ச் 16'ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, வகுப்பில் ஜிகாத் ஹிஜாப் தடையை உறுதி செய்து நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக புலம்பிய முஸ்லிம் மாணவர்களை மேற்கோள்காட்டி இந்த தீர்ப்பு இஸ்லாத்திற்கு அவசியமில்லை எனக் குறிப்பிட்டது. இந்த தீர்ப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்றும் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை மீறும் தண்டனை எனவும் குறிப்பிட்டுள்ளது 'தி குயிண்ட்' இடதுசாரி இணையதளம்.
மேலும் அந்த செய்தியில் தீர்ப்பு குறித்து பேட்டி அளித்த சில இஸ்லாமிய மாணவர்கள் கூறியதாவது, இந்திய அரசியல் அமைப்பின் தலைமை சிற்பியான டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கூறியதாக மேற்கோள்காட்டி 'கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டால் அம்பேத்கர் அவர்கள் அழுவார்கள்' என்று குற்றம் சுமத்தினார்கள். இதுகுறித்து மேலும் மாணவர்கள் கூறியதாவது 'டாக்டர் அம்பேத்கர் ஒரு முறை அரசியலமைப்பு சட்டம் சிறந்தது எனக் கூறினார் ஆனால் அது அதை இயக்கும் நபர்களைப் பொறுத்தது, நமது அரசியலமைப்பு சட்டம் மூலமாக நாட்டில் இருந்து எவ்வளவோ நாங்கள் எதிர்பார்த்தோம்! இன்று டாக்டர் அம்பேத்கார் அவர்கள் உயிருடன் இருந்தால் உண்மையில் அழுவார்' என ஒரு இஸ்லாமிய மாணவர் கூறியதுபோல் செய்தி 'தி குயிண்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் சட்ட மேதை அம்பேத்கர் இஸ்லாமிய புர்காவைப் பற்றி என்ன கூறினார் என்பது நாம் நினைவு கொள்ள வேண்டிய ஒன்று. அவர் கூறியதாவது, "புர்கா அணிந்து பெண்கள் தெருக்களில் நடந்து செல்வது இந்தியாவில் காணப்பட்ட மிகவும் அருவருப்பான செயல்களில் ஒன்றாகும்" எனக் குறிப்பிட்டார். இது அம்பேத்கர் அவர்கள் தனது ஆய்வறிக்கையான 'பாகிஸ்தான் அல்லது பிரிவினையில்' எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அதில் தெரிவித்துள்ளதாவது, "இந்து சமுதாயத்தை விட முஸ்லிம் சமூகம் அதிக சமூக தீமைகளை தாங்கி நிற்கிறது எனவும் இந்து சமுதாயத்தைப் பாதிக்கும் அதே சமூக தீமைகளால் இந்தியாவில் உள்ள முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" எனவும் எழுதினார்.
முஸ்லிம் பெண்கள் மீது புர்கா உடை அமைப்பானது எவ்வாறு தீங்குவிளைவிக்கும் என்பதை அம்பேத்கர் விவரித்துள்ளார். அவர் குறிப்பிடும் பொழுது புர்கா முஸ்லிம் பெண்களின் உடலமைப்பில் மோசமான விளைவுகளை ஏற்படுத்த உள்ளது பொதுவாக ரத்தசோகை, காசோலை மற்றும் பயோரியா ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் உடல்கள் சரிந்து, முதுகு வளைந்து எலும்புகள் நீண்டு, கைகளும், கால்களும், மறைந்திருக்கும் விலா எலும்புகள், மூட்டுகள் மற்றும் கிட்டத்தட்ட அனைத்து எலும்புகளும் வலி கொடுக்கும்! இந்த இடுப்பெலும்பு பலவீனமடைவதால் பிரசவ நேரத்தில் அவர்கள் அகால மரணம் ஏற்படக் கூடும்' எனவும் அம்பேத்கர் எழுதினார்.
இப்படி அம்பேத்கர் கூறியதை மறைத்து இடதுசாரிகள் 'அம்பேத்கார் இன்று இருந்திருந்தால் கண்ணீரில் மூழ்கி இருப்பார்' என நீலிக்கண்ணீர் வடித்து தங்களது இஸ்லாமிய பிற்போக்குத் தனத்திற்கு அம்பேத்கரையும் அவர்கள் துணைக்கு அழைத்து வாதிடுகின்றனர்.
