Kathir News
Begin typing your search above and press return to search.

யோகி ஆதித்யநாத்தின் கோலாகல பதவியேற்பு விழா எப்பொழுது?

யோகி ஆதித்யநாத்தின் கோலாகல பதவியேற்பு விழா எப்பொழுது?

Mohan RajBy : Mohan Raj

  |  19 March 2022 12:00 PM GMT

உத்தரபிதேசத்தில் மாபெரும் வெற்றி பெற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்கும் விழா வரும் மார்ச் 25'ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றியது, இதில் உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பெரும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் பதவியைக் கைப்பற்றினார். இவரது பதவி ஏற்பு விழா வரும் மார்ச் 25ஆம் தேதி மாலை 4 மணிக்கு லக்னோவில் உள்ள ஷஹீத் சாலையில் உள்ள. இகானா மைதானத்தில் நடைபெறுகிறது.


விழாவுக்கு முன்பாக நடந்த முடிந்த தேர்தலில் கட்சியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற யோகி ஆதித்யநாத் சட்டப்பேரவை கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், ஜார்கண்ட் முதல்வர் முன்னாள் முதல்வர் ரகுபர்தாஸ் ஆகிய இருவரும் பார்வையாளராக நியமிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பா.ஜ.க'வின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைத் தவிர மற்ற அமைச்சர்களும் அன்றே பதவியேற்க உள்ளார்கள் எனவும் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பிரதிநித்துவம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெற்றிகரமான ஐந்தாண்டு ஆட்சியை நிறைவு செய்து பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்து வரலாறு படைத்துள்ளார் யோகி ஆதித்யநாத். பா.ஜ.க அரசின் இரண்டாவது பதவி ஏற்பு விழா இதுவாகும் 403 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜக 255 இடங்களையும் அதன் கூட்டணி கட்சிகள் 18 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.



Source - Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News