Kathir News
Begin typing your search above and press return to search.

தொடரும் கொலை மிரட்டல்கள் - "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" இயக்குனருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசு

தொடரும் கொலை மிரட்டல்கள் - தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசு
X

Mohan RajBy : Mohan Raj

  |  19 March 2022 6:00 PM IST

தொடரும் கொலைமிரட்டல்களால் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" படத்தின் இயக்குனரான விவேக் அக்னிஹோத்ரிக்கு மத்திய அரசு 'ஒய்' பிரிவு பாதுகாப்பை வழங்கி உள்ளது.


"தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்திற்கு ஹரியானா, மத்தியப் பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் வரிச்சலுகை வழங்கியுள்ளனர். மேலும் இந்த "காஷ்மீர் பைல்ஸ்" திரைப்படம் 1990-களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்த உண்மையை, சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்டது. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கிய இந்த திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது பல தரப்பிலும் இந்த படம் வரவேற்பை பெற்றது.


""தி காஷ்மீர் பைல்ஸ்" போன்ற திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு உண்மை தெரியவேண்டும் பல ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த உண்மையை படம் காட்டியுள்ளது" என பிரதமர் மோடியே குறிப்பிட்டு பேசும் அளவிற்கு 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் இருந்தது.


மேலும் "காஷ்மீர் பைல்ஸ்" திரைப்படம் திரைக்கு வந்த எட்டு நாட்களில் 100 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. இந்த படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை பரப்புவதாக இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி'க்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன, மேலும் மிரட்டல் செய்திகள் அவருக்கு வருவதாகவும் கூறி "காஷ்மீர் பைல்ல்ஸ்" படத்தின் இயக்குனருக்கு மத்திய பாதுகாப்பு படையின் "ஒய்" பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.


Source - Opindia.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News