Kathir News
Begin typing your search above and press return to search.

பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: தி.மு.க. பிரமுகர் மீது உரிய விசாரணை நடத்த ஸ்டாலின் அனுமதிப்பாரா?

பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: தி.மு.க. பிரமுகர் மீது உரிய விசாரணை நடத்த ஸ்டாலின் அனுமதிப்பாரா?
X

ThangaveluBy : Thangavelu

  |  22 March 2022 1:14 PM GMT

விருதுநகர் மாவட்டத்தில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டதை உரிய முறையில் விசாரணை நடத்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் போலீசாரை சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுப்பாரா என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன் 27, இவர் திமுக பிரமுகராக உள்ளார். ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 வயது இளம் பெண்ணை ஹரிஹரன் காதலிப்பதாக கூறி அவரை ஆபாசமாக வீடியோ எடுத்து தினமும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

அவர் மட்டுமின்றி கூட நண்பர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிலரையும் சேர்த்துக்கொண்டு பாலியல் அத்துமீறலில் ஹரிகரன் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். அதன்படி ஜூனத் அகமது 27, பிரவீன் 21 உள்ளிட்டோர் இளம் பெண்ணிடம் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் தன்னை காப்பாற்றுமாறு பாண்டிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இளம்பெண். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவர்கள் 4 பேர் மற்றும் ஹரிகரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; விருதுநகரில், ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து, 22 வயது பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்த அவலச் செய்தியறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன். இதைவிட கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயம் - இந்த வெட்கக்கேடான செயலுக்கு மூளையாக இருந்தது ஒரு உள்ளூர் திமுக பிரமுகர் இந்தக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அவசியமே, ஆனால், தற்போது அறிவாலயம் அரசில் ஒட்டுமொத்த காவல் துறையை மேம்படுத்துவதே, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களின் பிடியிலிருந்து உள்ளூர் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பாரா? இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News