Kathir News
Begin typing your search above and press return to search.

மணிப்பூர் பா.ஜ.க முதல்வருக்கு வாழ்த்துக்கள் கூறிய முதல்வர் ஸ்டாலின்

மணிப்பூர் பா.ஜ.க முதல்வருக்கு வாழ்த்துக்கள் கூறிய முதல்வர் ஸ்டாலின்
X

Mohan RajBy : Mohan Raj

  |  22 March 2022 6:00 PM IST

மணிப்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் முதல்வருக்கு என்.பீரேன் சிங்'கிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.


உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு மாநிலங்களை பா.ஜ.க வென்றது. இதில் மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி அடைந்தது, இதனைத்தடர்ந்து முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பா.ஜ.க எம்.எல்.ஏ'க்கள் கூட்டம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது அந்தக் கூட்டத்தில் மணிப்பூர் முதல்வராக பீரேன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.


இதனைத்தடர்ந்து மணிப்பூர் மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பீரேன் சிங்கிற்கு வாழ்த்துக்களை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, "மணிப்பூர் மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள என்.பீரேன் சிங்'குக்கு எனது வாழ்த்துக்கள்! ஆட்சிக்காலம் வெற்றிகரமானதாக அமைய அவருக்கும் அவரது அமைச்சர் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News