விருதுநகர் சம்பவம் - அண்ணாமலை போராட்டம் அறிவித்த அடுத்த நாளே சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்

By : Mohan Raj
விருதுநகரில் தி.மு.க நிர்வாகி தலித் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததற்கு 24'ஆம் தேதி அண்ணாமலை போராட்டம் அறிவித்த அடுத்த நாளே தமிழக முதல்வர் ஸ்டாலின் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகரில் தி.மு.க நிர்வாகி தன் நண்பர்களுடன் 22 வயது தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 22 வயது தலித் பெண்ணுக்கு தி.மு.க நிர்வாகிகளால் ஏற்பட்ட இந்த கொடுமையை கண்டித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க சார்பில் விருதுநகரில் 24'ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என அறிவித்தார்.
இதையடுத்து அண்ணாமலை ஆர்ப்பாட்டம் நடக்கும் என அறிவித்த அடுத்த நாளே சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் பாலியல் வன்புனர்வு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடக்கும் என உறுதியளித்துள்ளார். விருதுநகர் சம்பவத்தை சம்பவத்தையடுத்து போராட்டத்தை அண்ணாமலை அறிவித்தார் 24 மணி நேரத்திற்கு உள்ளேயே சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டது அண்ணாமலை போராட்டத்தை அறிவித்ததன் பலன் என்றே பலரும் கருதுகின்றனர்.
