Kathir News
Begin typing your search above and press return to search.

ஓ.பி.எஸ் பேசுகையில் இருந்து திடீரென வெளியேறிய பி.டி.ஆர் - சலசலக்கும் சட்டப்பேரவை

ஓ.பி.எஸ் பேசுகையில் இருந்து திடீரென வெளியேறிய பி.டி.ஆர் - சலசலக்கும் சட்டப்பேரவை
X

Mohan RajBy : Mohan Raj

  |  24 March 2022 6:15 PM IST

சட்டப்பேரவையில் ஓ.பி.எஸ் பேசும் பொழுது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியேறியது தமிழக அரசியலில் பரபரப்பாகியுள்ளது.


சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திடீரென வெளியேறினார், இதுகுறித்து அ.தி.மு.க'வின் இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்பொழுது, "நிதியமைச்சராக, முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பணியாற்றியவர் ஓ.பி.எஸ் நேற்று அவர் கருத்துக்கு பதில் அளிக்காமல் நிதியமைச்சர் வெளியேறுகிறார். ஓ.பி.எஸ் பேசும்போது நிதியமைச்சர் வெளியேறியது எதிர்க்கட்சிகளை அவமதிக்கும் செயல்" என்றார்.


இந்நிலையில் ஓ.பி.எஸ் பேசும்பொழுது நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியேறியது குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளதுள்ளார். அதில்,, "ஓ.பி.எஸ் பேசுவதைக் கேட்கக் கூடாது என்ற நோக்கத்தில் அவர் வெளியே செல்லவில்லை, இது ஒரு கூட்டுப் பொறுப்பு மற்றும் அமைச்சர்கள் என அனைவரும் சட்டப்பேரவை தான் இருந்தனர். நிதியமைச்சர் அலுவல் நிமித்தமாக அறையிலிருந்து வெளியேறினார் என்பதை நான் அறிந்து கொண்டேன்" என்றார்.


சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். இன்றும் அவரது சில கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. இதனால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News