Kathir News
Begin typing your search above and press return to search.

"நமக்குள்ளே முடிச்சுக்குவோம்" என கோவையில் டீல் பேசிய வருமானவரித்துறை அதிகாரியை கையும் களவுமாக பிடித்த சி.பி.ஐ

நமக்குள்ளே முடிச்சுக்குவோம் என கோவையில் டீல் பேசிய வருமானவரித்துறை அதிகாரியை கையும் களவுமாக பிடித்த சி.பி.ஐ
X

Mohan RajBy : Mohan Raj

  |  24 March 2022 6:45 PM IST

கோவை நில உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கியதாக வருமானவரித் துறை துணை ஆணையர் உட்பட இருவர் சி.பி.ஐ வசம் சிக்கியுள்ளனர்.


கோவை ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இவர் அப்பகுதியில் தனது விவசாய நிலத்தை அவர் கடந்த 2013'ம் ஆண்டு விற்பனை செய்துள்ளார். 60 ஏக்கர் மதிப்புள்ள நிலத்தை 10 கோடிக்கு விற்றது தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் பால தண்டபாணி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர்.


அப்போது அரசின் வழிகாட்டு முறையை பின்பற்றவில்லை நிலத்தை விற்பனை செய்த பணத்துக்கு வருமான வரி செலுத்த வேண்டும் என கோவை வருமான வரித்துறை ஆணையர் டேனியல்ராஜ் கூறி உள்ளார், ஆனால் பாலதண்டாயுதபாணி தான் முறைப்படி செலுத்தியதாக பதிலளித்துள்ளார். டேனியல்ஸ் அவரை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து முறையாக வரி கட்ட வேண்டும் என 5 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இரு தரப்பினரும் பேசி 2.5 லட்சத்தில் சமாதானம் ஆகியுள்ளனர்.


இதற்கு ஆடிட்டர் ஸ்ரீதரன் என்பவர் இடையே செயல்பட்டுள்ளார், இது குறித்து பால தண்டபாணி சி.பி.ஐ அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். சி.பி.ஐ அறிவுறுத்தலின் பேரில் வருமானவரித் துறை அலுவலகத்துக்குச் சென்ற பாலதண்டாயுதபாணி ரசாயனம் தடவிய 50 லட்சம் ரொக்கத்தை பணமாகவும், இரண்டு லட்சத்துக்கு காசோலைகளை வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை செய்து கைது செய்தனர். டேனியல் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகளுடன் அப்பொழுது கூறியுள்ளார்.


இதனால் கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சோதனை செய்தனர் அங்கு அவருக்கு உடல்நலக் குறைவு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் இருவரையும் சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர், மேலும் இது தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சி.பி.ஐ தரப்பு கூறுகிறது.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News