மக்களை ஏமாற்றிய தி.மு.க. பட்ஜெட்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
By : Thangavelu
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த உடன் இரண்டு முறை பட்ஜெட்டை தாக்கல் செய்தது. ஆனால் அதில் மக்களுக்கான பட்ஜெட்டாக அமையவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.
மக்களை ஏமாற்றிய தி.மு.க. பட்ஜெட்
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 25, 2022
சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம், மாநிலத் தலைவர்
திரு.@annamalai_k அவர்கள்
தலைமையில் நடைபெற்றது#BJPAgitation pic.twitter.com/0tn7fyln45
இதனால் திமுக அரசின் பட்ஜெட்டை கண்டித்து இன்று சென்னை வள்ளூவர் கோட்டத்தில் தமிழக பாஜக சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இதில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த கூட்டத்தில் நாகர்கோயில் பாஜக எம்.எல்.ஏ., காந்தி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு திமுகவுக்கு எதிராக தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.
Source, Image Courtesy: Twiter