Kathir News
Begin typing your search above and press return to search.

'எந்தப் பக்கமும் நாங்கள் இல்லை அமைதியே இந்தியாவின் நிலைப்பாடு' - அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்

எந்தப் பக்கமும் நாங்கள் இல்லை அமைதியே இந்தியாவின் நிலைப்பாடு - அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்
X

Mohan RajBy : Mohan Raj

  |  25 March 2022 7:30 PM IST

'ரஷ்யா-உக்ரைன் சம்பந்தப்பட்ட சூழ்நிலை எங்கள் பிரச்சினை இல்லை என்பது இந்தியாவின் நிலைப்பாடு அல்ல நாங்கள் அமைதிக்காக இருக்கிறோம் என்பதே எங்கள் நிலைப்பாடு' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.


ரஷ்யா-உக்ரேன் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 24'ஆம் தேதி தொடங்கப்பட்ட போரானது ஒரு மாதத்தை கடந்தும் இன்று வரை முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல உலக நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர், ஆனால் இந்தியாவை பொருத்தவரை இந்த விவகாரத்தில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. உக்ரேன் விவகாரம் தொடர்பாக ஐ.நாவில் நான்குமுறை வாக்கெடுப்பு நடத்தப்படும் இந்தியா எந்த பக்கமும் வாக்களிக்காமல் நடுநிலை வகிக்கிறது.


இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். அப்போது பேசிய ஜெய்சங்கர், "ரஷ்யா-உக்ரேன் சம்பந்தப்பட்ட சூழல் எங்கள் பிரச்சினை அல்ல என்பது இந்தியாவின் நிலைப்பாடு அல்ல நாங்கள் அமைதிக்காக இருக்கிறோம் என்பதே எங்கள் நிலைப்பாடு. எங்கள் கொள்கைகளில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம் சர்வதேச ஒழுங்கு ஒருமைப்பாடு மற்றும் மாநிலங்களின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்ற எங்கள் நம்பிக்கையால் எங்கள் கொள்கை வழி நடத்தப்படுகிறது" என்றார் அவர்.


ரஷ்யாவுக்கு எதிராக முடிவு எடுப்பதில் இந்தியா சற்று நடுங்குகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.


Image source - ANI

Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News