ஹிஜாப் போராட்டத்தை அடுத்து கர்நாடகாவில் பள்ளியில் சேதப்படுத்தப்பட்ட சரஸ்வதி தேவி சிலை

By : Mohan Raj
கர்நாடகாவில் ஹிஜாப் ஆதரவு முஸ்லிம் மாணவர்கள் போராட்டம் நடத்திய சில நாட்களுக்கு பிறகு பெலகாவி பள்ளியில் சரஸ்வதி சிலை சேதப் படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இருந்து தெய்வங்களின் சிலைகள் அவமதிக்கும் இருவேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, பெல்காம் மாவட்டம் சிக்கோடி தாலுகாவில், அரசு தொடக்கப்பள்ளியில் இருந்த சரஸ்வதி சிலையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் சரஸ்வதி தேவி சிலை பலத்த சேதம் அடைந்துள்ளது. மேலும் சரஸ்வதி தேவியின் நான்கு கைகளில் இரண்டு கை உடைந்து உடைந்து துண்டு துண்டுகளாகச் சிதைக்கப்பட்டுள்ளது.
பெல்காம் மாவட்டம் சிக்கோடி தாலுக்காவில் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை மாலை இச்சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை சரஸ்வதி சிலை அவமதிப்பு செய்யப்பட்டது பள்ளி நிர்வாகத்திற்கு தெரிய வந்தது தற்பொழுது சிக்கோடி போலீசில் புகார் அளித்துள்ளனர் பள்ளி நிர்வாகத்தினர்.
அதேபோல் மற்றொரு சம்பவத்தில் ஷிவமெக்கா'வில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் சரஸ்வதி சிலைகளை மர்ம நபர்கள் அடித்து உடைத்துள்ளனர். பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலை மற்றும் அனைத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
பல ஏழை மாணவர்களின் கற்றல் மையமாக விளங்கும் ஹரௌஹள்ளி அரசுப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் பல பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் என அனைவரையும் கோபப்படுத்தியுள்ளது. அவர்கள் இப்போது குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோன்ற தாக்குதலுக்கு மதுபானம் ஆகியவையே காரணம் என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சில ஆண்கள் தினமும் இரவில் குடித்துவிட்டு கிராமப்பகுதியில் உள்ள பல பகுதிகளில் அட்டகாசம் செய்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
கர்நாடகாவின் பள்ளிகளில் ஹிஜாப் தடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பல முஸ்லிம் மாணவிகள் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சரஸ்வதி பூஜை கொண்டாடுவது எதிர்ப்பு தெரிவித்து சில வாரங்களுக்கு பிறகு பள்ளி வளாகத்திற்குள் சிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
