Kathir News
Begin typing your search above and press return to search.

'வரி குறைப்பு' வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்ததும் எடுத்த தவறான முடிவுகளால் தள்ளாடும் ராஜபக்சே அரசு

வரி குறைப்பு வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்ததும் எடுத்த தவறான முடிவுகளால் தள்ளாடும் ராஜபக்சே அரசு

Mohan RajBy : Mohan Raj

  |  28 March 2022 10:00 AM GMT

கோத்தபய ராஜபக்சே அரசு எடுத்த தவறான பொருளாதார முடிவுகள் காரணமாக இலங்கை மக்கள் பொருளாதார ரீதியாக கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.


இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அரசு பொருளாதாரத்தை சீரழிக்கும் பல தவறான பொருளாதாரக் கொள்கை முடிவுகளை எடுத்ததால்தான் மக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள். குறிப்பாக வரி குறைப்பு என்பதை பிரதான வாக்குறுதியாக வைத்து ஆட்சிக்கு வந்த கோத்தபய அரசு அதை செயலிலும் காட்டியதால் அது பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது. கொத்தபய ஆட்சிக்கு வந்த சில நாட்களில் 15 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது. இதனால் அரசு வருவாய் பெருமளவு குறைப்பு காரணமாக 2020 5 சதவீதமாக இருந்த பட்ஜெட் பற்றாக்குறை 2022-ல் 15 சதவீதமாக அதிகரித்தது.


இலங்கை நாணயத்தின் நெகிழ்வுத்தன்மை பெறுவதற்காக இலங்கை ரூபாயின் மதிப்பை மத்திய வங்கி குறைத்தது, இதனால் ஒரு டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 200 லிருந்து 290 ஆக குறைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு குறைந்ததால் நாட்டில் விலைவாசி வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.


இறக்குமதி பொருள்கள் அமெரிக்க டாலர்களில் பணம் செலுத்த வேண்டுமானால் இவற்றுக்கு கொடுக்கும் அளவுக்கு இறங்கி வங்கிகளிடம் டாலர் கையிருப்பில் இல்லை இதனால் இறக்குமதி தடைபட்டது அத்தியாவசியப் பொருட்களுடன் துறைமுகத்துக்கு வந்த கப்பல்கள் பொருட்கள் இறக்கப்படாமல் மாதக்கணக்கில் காத்திருக்கின்றன இதனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.


மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், பால், பால் பவுடர் பாக்கெட் போன்றவை மக்கள் வாங்க முடியாத அளவிற்கு விலை உயர்ந்தன. உணவகங்களில் பால், தேநீரின் விலை 500 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 40 ஆக அதிகரித்துள்ளது, ஒரு கிலோ மஞ்சளின் விலை 5000, ஒரு கிலோ சீரகம் 8000 என விலை அதிகரித்துள்ளது.

மக்களிடம் வாக்குகளை வாங்க வரிகளை குறைப்பேன் என்ற வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்தபின் வரிகளை குறைந்ததால் ஏற்பட்டதன் விளைவே என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


Source - Maalai Malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News