Kathir News
Begin typing your search above and press return to search.

பெண்கள் தனியாக விமானத்தில் பறக்க தடை - தாலிபான்கள் அரசு புதிய கட்டுப்பாடு

பெண்கள் தனியாக விமானத்தில் பறக்க தடை - தாலிபான்கள் அரசு புதிய கட்டுப்பாடு
X

Mohan RajBy : Mohan Raj

  |  28 March 2022 9:00 PM IST

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் தாலிபான்கள் ஆட்சி அமைத்ததிலிருந்து பெண்களுக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.


தாலிபன்கள் பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர், அதில் பெண்கள் தொரலைக்காட்சிகளில் நடிக்கக்கூடாது, ஹிஜாப் கட்டாயம் என தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த வாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் புதன்கிழமை வகுப்பிற்கு சென்றனர் ஆனால் அதிகாரிகள் அவர்களை ஒரு சில மணி நேரத்தில் வீட்டுக்கு அனுப்ப உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் தாலிபான்கள் அரசு மேலும் சில கட்டுப்பாடுகளை பெண்களுக்கு எதிராக விதித்துள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது, 'ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாக விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படுகிறது, என்றும் மேலும் ஆண்களின் துணையோடுதான் பெண்கள் பயணிக்க வேண்டும்' என்றும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து காபூல் விமான நிலையத்தில் தனித்தனியே பயணம் மேற்கொள்ள இருந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தாலிபான்களின் இந்த செயலுக்கு உலக நாடுகள் பல்வேறு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனSource - Junior vikatan.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News