Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் அதிகரிக்கும் போதை மாஃபியா - ராயப்பேட்டையில் ஒரு கும்பலை சுற்றி வளைத்த போலீஸ்

தமிழகத்தில் அதிகரிக்கும் போதை மாஃபியா - ராயப்பேட்டையில் ஒரு கும்பலை சுற்றி வளைத்த போலீஸ்
X

Mohan RajBy : Mohan Raj

  |  28 March 2022 9:15 PM IST

சென்னையில் வாட்ஸ்அப் குழு அமைத்து அதன் மூலம் போதைப் பொருட்களை விற்பனை செய்த குழுவை கைது செய்துள்ளது காவல்துறை.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது, இதன் மூலம் நடக்கும் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க சென்னை காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை பகுதிகளில் இரவு நேரங்களில் போதை மாத்திரை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.


இந்த தகவலின் அடிப்படையில் இரவு நேரத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் காவல்துறையினர். கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற வாகன சோதனையின்போது சந்தேகத்துக்குரிய வகையில் ஒருவரிடம் சோதனை நடத்தப்பட்டது அப்போது அவரிடம் இருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன, தொடர்ந்து அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அது வலி நிவாரணி மாத்திரை என அவர் கூறினார்.


மேலும் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரிடம் மேலும் விசாரணை நடத்தும் பொழுது அந்த நபரிடம் இருந்து 50 க்கும் மேற்பட்ட போதை மாத்திரை அட்டைகள், போதை டானிக், ஒரு கிலோவுக்கும் அதிகமான கஞ்சா, ஏர் பிஸ்டல் ரக துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு அவர் தொடர்புடைய பத்துக்கும் மேற்பட்ட வகைகள் பைக்குகள், மூன்று கார்கள், 5 லட்ச ரூபாய் பணம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளது.


அவர்களிடம் மேலும் விசாரித்தபோது வாட்ஸ் அப் குழு அமைத்து அதன் மூலம் போதைப் பொருட்களை மக்களிடையே விற்பனை செய்து வந்தது தெரியவந்தது மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News