Kathir News
Begin typing your search above and press return to search.

ஜாதி பெயரை சொல்லி தி.மு.க. அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னை மிரட்டினார்: பி.டி.ஓ., பரபரப்பு புகார்!

ஜாதி பெயரை சொல்லி தி.மு.க. அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னை மிரட்டினார்: பி.டி.ஓ., பரபரப்பு புகார்!
X

ThangaveluBy : Thangavelu

  |  29 March 2022 8:09 AM IST

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னை ஜாதி பெயரை சொல்லியும், சேர்மேன் பேச்சை மட்டும்தான் கேட்பாயா, உன்னை உடனடியாக மாற்றுகிறேன் என மிரட்டினார் என முதுகுளத்தூர் பிடிஓ ராஜேந்திரன் பரபரப்பான புகார் கூறியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பிடிஓவாக இருப்பவர் ராஜேந்திரன். இவர் பரபரப்பான ஒரு புகாரை கூறியுள்ளார்: கடந்த மார்ச் 27ம் தேதி காலை என்னையும் மற்றொரு பிடிஓவையும் அமைச்சர் ராஜகண்ணப்பன் வீட்டிற்கு வருமாறு உதவியாளர் கூறினார். இதனை தொடர்ந்து அமைச்சர் சந்திக்க சிவகங்கை வீட்டிற்கு சென்றபோது தன்னை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டினார்.

அது மட்டுமின்றி ஒன்றிய சேர்மேன் பேச்சை கேட்டுதான் செயல்படுவீர்களா என மிரட்டினார். எங்கள் கட்சிக்காரர்கள் சொல்வதை கேட்க மாட்டீர்களா எனவும் மிரட்டினார். இது போன்று செயல்பட்டால் பிடிஓ நாற்காழியில் அமரவிட மாட்டோம் என்று அமைச்சர் மிரட்டினார். இவ்வாறு பிடிஓ கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News