Kathir News
Begin typing your search above and press return to search.

பட்டியலின ஜாதி குறித்து பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் - இதுவரை வாய் திறக்காத 'தோழமை சுட்டுதல்' திருமாவளவன்

பட்டியலின ஜாதி குறித்து பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் - இதுவரை வாய் திறக்காத தோழமை சுட்டுதல் திருமாவளவன்
X

Mohan RajBy : Mohan Raj

  |  30 March 2022 8:45 AM IST

பட்டியலின ஜாதியை சொல்லி அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிகாரி ஒருவரை திட்டியதற்காக இலாகா மாற்றப்பட்டுள்ளனர் ஆனால் பட்டியலின ஜாதியின் பாதுகாவலன் என்று கூறிக் கண்டிருக்கும் திருமாவளவன் இதுவரை இந்த சம்பவம் குறித்து வாய் திறக்கவில்லை.





போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் முதுகுளத்தூர் பி.டி.ஓ'வை ஜாதியை சொல்லி திட்டியதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரி (பி.டி.ஓ) அவர்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னை சாதியைச் சொல்லித் திட்டினார் எனவும் இதனால் தனக்கு மனவேதனை ஏற்பட்டுள்ளதாக கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இவரது பேட்டியை தொடர்ந்து பல வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட முதுகுளத்தூர் அதிகாரிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் ராஜகண்ணப்பனை உடனடியாக பிற்படுத்தப்பட்ட நலத்துறைக்கு மாற்றம் செய்தார்.



அரசு அதிகாரி ஒருவரை பட்டியலின ஜாதியை சொல்லி தி.மு.க அமைச்சர் ஒருவர் திட்டிய விவகாரம் நேற்று முதல் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அவர் துறை மாற்றப்படும் அளவுக்கு விவகாரம் முற்றியுள்ள நிலையில் பட்டியலின மக்களின் பாதுகாவலன், பட்டியலின மக்களுக்கு நாங்கள் விடியல் என கூறிக்கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் திருமாவளவன் இதுவரை இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவிக்கவில்லை, கருத்தும் கூறவில்லை. தி.மு.க கூட்டணி கட்சி என்பதும் ஆளும் தி.மு.க'வின் சின்னத்தில் போட்டியிட்ட தர்மத்திற்கும் தி.மு.க'வின் கூட்டணி இட ஒதுக்கீட்டுக்கு பயந்து பட்டியலின ஜாதி குறித்து பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு இதுவரை திருமாவளவன் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.


இதிலிருந்தே தெரிகிறது திருமாவளவனின் பட்டியலின ஜாதி மக்கள் மீதான கரிசனம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News