டெல்டா மாவட்டங்களில் சகஜமாக புழங்கும் போதைப் பொருள்களால் சிக்கி சீரழியும் இளைஞர்கள்
By : Mohan Raj
தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் போதைப் பொருள் விநியோகம் தலைவிரித்தாடுகிறது, இந்த நிலையில் போதைப்பொருள்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள போலீசார் சமீபத்தில் திருவாரூரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சமீபகாலமாக போதைப்பொருட்களின் நடமாட்டம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது. இவை எளிதாகக் கிடைப்பதாலும் பள்ளிக்கூடம், கல்லூரி போன்றவற்றின் அருகாமையிலேயே கிடைப்பதாலும் போதைப் பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான இளைஞர்கள் போதையிலேயே சுற்றி வருகின்றனர் இதனால் பல பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் இந்த போதைப் பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்த நிலையில் இது தொடர்பாக ஏற்பட்ட தேடுதல் வேட்டையில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து திருவாரூர் காவல் துறையினர் கூறுகையில், "மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் போதை பொருட்களை விநியோகத்தை ஒழிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரடி பார்வையில் திருவாரூர் மாவட்ட தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடம், வினியோகம் செய்யும் வியாபாரிகள், இரகசியமாக விற்பனை செய்யக்கூடிய இடம் என பொது மக்களுக்கள் தெரிவிக்கும் அடிப்படையில் புகார் அடிப்படையில் தனிப்படை அமைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் திருவாரூர் நகர காவல் சரகத்திற்கு உட்பட்ட விஜயபுரம் பகுதியை சேர்ந்த மணிராஜ் என்பவர் வீட்டில் தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்ட பொழுது சாக்குமூட்டையில் மறைத்து வைத்திருந்த 295 கிலோ புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இது திருவாரூர் போன்ற ஒரு ஊரில் நடைபெற்ற கைது சம்பவம் மட்டும் தான், ஆனால் தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கஞ்சா, புகையிலை, போதை பொருட்கள் இன்னும் அதிக அளவில் சகஜமாகப் இறங்கி வருவது பொதுமக்களிடையே பயத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது தொடர்பான நெட்வொர்க்கை கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்