'எனக்கே மாமுல் இல்லையா?' என ஆத்திரத்தில் பிரியாணி கடையை அடித்து உடைத்த தி.மு.க கவுன்சிலர்
By : Mohan Raj
பிரியாணி கடையில் மாமூல் கேட்டு தாக்குதல் நடத்திய தி.மு.க கவுன்சிலர் மற்றும் ஒரு ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை பிரதான சாலையில் மணீஷ் என்பவர் 'ராயல் ட்ரீட்' என்ற பெயரில் பிரியாணி கடை மற்றும் டீ ஸ்டால் நடத்திவருகிறார். இந்நிலையில் கடைக்கு சென்ற இரண்டு நபர்கள் கடையிலிருந்த உரிமையாளர்களிடம் மாதம் பத்தாயிரம் ரூபாய் செலவுக்கு கொடுக்க வேண்டும் இல்லையெனில் கடையை நடத்த விடமாட்டோம் என மிரட்டியுள்ளனர். உடனே பயந்த கடை உரிமையாளர் 3000 ரூபாய் மட்டும் கொடுக்க முடியும் எனவும் 3000 ரூபாய் பணத்தை கூகுள்பே'வில் அனுப்பியுள்ளார். மேலும் 7000 ரூபாய் பணத்தை கொடுக்க வேண்டும் இல்லையெனில் கடையை அடித்து உடைத்த விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
ஆனால் கடை உரிமையார் பணம் தரவில்லை, இதனால் ஆத்திரமடைந்த இரு நபர்களும் சாலையில் இருந்த கற்களை எடுத்து கடையை அடித்து உடைத்துள்ளனர். உடனே கடை உரிமையாளரை'யும் ஆத்திரத்தில் தாக்கத் தொடங்கினர். இதனை பார்த்தவுடன் அங்கு இருந்தவர்கள் ஓட்டம் பிடித்த நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூடி விட்டனர்.
உடனே அங்கு விரைந்த காவல்துறையினர் என்ன நடந்தது என விசாரித்தனர், அடித்து உடைத்தவர்கள் அங்கிருந்து சென்றதால் கடையில் உள்ள சி.சி.டி.வி ஆராய்ந்து பார்க்கும்போது அவர்கள் திருநீர்மலை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சுகுமார் மற்றும் தினேஷ் என்பது தெரியவந்தது மேலும் அவர்கள் ஒரு உறவினரின் வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர் விசாரித்ததில் சுகுமார் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது
மேலும் அதில் தினேஷ் என்பவர் தி.மு.க கவுன்சிலர் என்பதும் தெரியவந்தது அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.