வேலூரில் சிறுவனின் சிகிச்சைக்காக குடும்பத்தை மதம் மாற கூறிய கிருஸ்துவ மிஷனரி மருத்துவமனை - பகீர் தகவல்
By : Mohan Raj
வேலூரில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 3 வயது மகனுக்கு இலவச சிகிச்சை அளிக்க இந்து குடும்பத்தை கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு கிறிஸ்தவ மிஷனரி மருத்துவமனை வற்புறுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த இந்துக் குடும்பம் ஒன்று, தமிழ்நாட்டின் வேலூரில் உள்ள ஒரு கிறிஸ்தவ மிஷனரியால், தங்கள் 3 வயது குழந்தைக்கு இலவச சிகிச்சைக்காக ஈடாக, கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, தேவாலயத்தில் பிரார்த்தனை செய்ததாகக் செய்திகள் வெளியாகியுள்ளது. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு செய்தியின்படி, 34 வயதான உணவக ஊழியர் கர்நாடகாவின் பசவனா பாகேவாடியில் வசித்துவருகிறார். தனது மூன்று வயது மகனுக்கு முறையான மருத்துவ சிகிச்சைக்காக மிகவும் சிரமப்பட்டுள்ளார். மேலும் இரண்ணா ஏற்கனவே தனது மகனின் சிகிச்சைக்காக 3 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை பெற ஏழை தந்தையாகிய அவர் தென்னிந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளார். இறுதியாக, அவர் தமிழ்நாட்டின் வேலூரில் ஒரு கிறிஸ்தவ மிஷனரி நடத்தும் மருத்துவமனைக்குச் சென்றார், இது அவரது மகனுக்கு இலவச சிகிச்சைக்கு ஈடாக சில நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது. மிஷனரி இரன்னாவை கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படியும், மருத்துவமனையில் இலவச மருத்துவ சிகிச்சை பெற குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு ஒரு தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யுமாறும் வற்புறுத்தினார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களிடம் பேசிய இரன்னா, தனது மகனின் சிகிச்சைக்காக எங்கிருந்தும் எந்தவிதமான நிதியுதவியையும் பெற முடியாமல் சோர்வடைந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் மாதம் ரூ.12,000 மட்டுமே சம்பாதித்ததாகவும், அதிலும் பாதியை நோயுற்ற மகனின் மருத்துவச் சிகிச்சைக்காக செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
இரண்ணா கூறியது போல், வேலூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றபோது, அவருடைய மகனின் எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதியளித்தனர்.
"கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவது குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. என் மகனின் அனைத்து மருத்துவ செலவுகளையும் கவனித்துக்கொள்வதாக மருத்துவமனை அதிகாரிகள் உறுதியளித்ததால், நான் இயேசுவை ஏற்றுக்கொள்வதில் உறுதியாக இருந்தேன், "இரண்ணா விவரித்தார், அவருக்கு இரண்டு மகள்கள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இருப்பினும், கர்நாடகாவில் உள்ள பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள BLDE சங்கம், தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட அவரது மூன்று வயது மகனுக்கு சிகிச்சை அளிக்க உதவி செய்து இரண்ணாவின் உதவிக்கு வந்தது. தங்கள் மகனுக்கு இலவச சிகிச்சை அளித்து இரண்ணாவையும் அவரது குடும்பத்தாரையும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவதைத் தடுத்தனர். தற்போது கிறிஸ்தவ மதத்திற்கு மாறும் திட்டத்தை குடும்பத்தினர் கைவிட்டனர்.