Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தியில்.உள்ள மடங்கள்,கோவில்களுக்கு தண்ணீர், வீட்டு வரி விலக்கு அளித்து அதிரடி உத்தரவு பிறப்பித்த யோகி

அயோத்தியில்.உள்ள மடங்கள்,கோவில்களுக்கு தண்ணீர், வீட்டு வரி விலக்கு அளித்து அதிரடி உத்தரவு பிறப்பித்த யோகி

Mohan RajBy : Mohan Raj

  |  2 April 2022 8:30 AM GMT

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தியில் உள்ள கோவில்கள், மடங்கள், தர்மசாலாக்கள் போன்றவற்றுக்கு தண்ணீர், வீட்டு வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளார்.

யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, வெள்ளிக்கிழமை முதல் முறையாக அயோத்திக்குச் சென்று, அப்பகுதியில் உள்ள கோயில்கள் மற்றும் பிற புனித ஆலயங்களுக்கு வணிக மற்றும் குடிமக்களின் வரிகளை விதிக்க வேண்டாம் என்று நகரின் மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். புனித நகரில் நடைபெறவுள்ள ராம நவமி மேளாவுக்கான ஏற்பாடுகளையும் அவர் மேற்கொண்டார்.

ஹனுமன்கர்ஹி கோவிலில் பிரார்த்தனை செய்துவிட்டு ராமர் கோவில் கட்டும் இடத்திற்கு சென்றார் யோகி, பின்னர் பல்ராம்பூர் பகுதிக்கு சென்று மூன்று கோவில்களில் பிரார்த்தனை செய்தார். சனிக்கிழமை சித்தார்த்நகருக்குச் செல்வதற்கு முன், அவர் தேவி பாட்டன் கோவிலில் இரவு தங்குவார் என முதல்வர் தரப்பு அறிவித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் தொண்டு மற்றும் பொது சேவை செய்வதால், மடங்கள், கோவில்கள், தர்மசாலாக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் வணிகக் கட்டணங்களை வீட்டு வரி, தண்ணீர் வரி, சாக்கடை வரி ஆகியவற்றை மாநகராட்சி வசூலிக்கக் கூடாது என்று முதல்வர் ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.

கூடுதலாக, நகரின் மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து வரும் காணிக்கைகளை மட்டுமே உள்ளூர் நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் பரிந்துரைத்துள்ளார், அயோத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் இதற்கான திட்டத்தை தயாரித்து மாநில அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும் என யோகி கூறியுள்ளார்.

மேளா ஏற்பாடுகளை பார்வையிடும் போது முதல்வர் ஆதித்யநாத் தனது உரையில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியுள்ளதாகவும், இந்தியா முழுவதிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் அயோத்திக்கு வருவார்கள் என்றும் குறிப்பிட்டார். இதை மனதில் வைத்து, ராமாயண சகாப்தம் நிறைந்த சூழல் முழுவதையும் வழிபடுபவர்கள் கண்டு களிக்கும் வகையில் அயோத்தியை அரசு சார்பில் ஒரு அமைப்பை உருவாக்கி அலங்கரிக்கவும் திட்டம் வைத்துள்ளதாக கூறினார் யோகி.

முதல்வருடன் ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கலந்து கொண்டார், அவர் அடித்தளப் கட்டுமானப் பணிகள் சுமார் 10% முதல் 15% வரை முடிவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அடிப்படை கட்டுமானப்பணியை ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்" என கூறினார்.



Source - Opindia.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News