Kathir News
Begin typing your search above and press return to search.

வரலாறு காணாத நெருக்கடியில் இலங்கை - தப்பி செல்கிறதா ராஜபக்சே குடும்பம்?

வரலாறு காணாத நெருக்கடியில் இலங்கை - தப்பி செல்கிறதா ராஜபக்சே குடும்பம்?

Mohan RajBy : Mohan Raj

  |  3 April 2022 7:00 AM GMT

இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பொது அவசர நிலையை பிரகடனம் செய்துள்ள விவகாரம் இலங்கை மக்களை பெரும் கொதிப்படைய செய்துள்ளது.


இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சே , பொது அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். இலங்கையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பொது அவசரநிலை பிரகடனம் செய்து ராஜபக்சே சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டார்.

ஜனாதிபதியின் கட்டளையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார். வியாழனன்று நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு கூடியிருந்த ராஜபக்சே'வின் இல்லத்தை முற்றுகை செய்தனர். இதனால் இல்லத்திற்கு வெளியே வன்முறைப் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து இலங்கை தீவு தேசத்தில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதில் அவர் தோல்வியடைந்ததற்காக கோரினர்.

போராட்டம் வன்முறையாக மாறியதால் பலர் காயம் அடைந்தனர் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை அகற்றிய போராட்டக்காரர்கள் மீது போலீஸ்காரர்கள் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்களை பிரயோகித்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பலர் கைது செய்யப்பட்டதோடு, கொழும்பு நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியால் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு தொடர்வதால் மக்கள் அவதியில் இருக்கின்றனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி ராஜபக்சேவின் இல்லத்திற்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையின் பின்னணியில் ஒரு தீவிரவாதக் குழு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வன்முறையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளுடன் தொடர்புடைய வழக்கறிஞர்கள், காவல்துறை கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றஞ்சாட்டக்கூடும் என்று கூறியுள்ளனர்.

போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், ஐந்து போலீசார் காயமடைந்தனர், ஒரு போலீஸ் பஸ், ஒரு ஜீப் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையின் தண்ணீர் பீரங்கி வண்டிக்கும் சேதம் விளைவித்தனர். இலங்கை தற்போது வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. எரிபொருள், சமையல் எரிவாயு, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, நீண்ட நேரம் மின்வெட்டு போன்றவற்றால் பொதுமக்கள் பல வாரங்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.

ராஜபக்ச தனது அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பாதுகாத்து, அன்னியச் செலாவணி நெருக்கடி தாம் ஏற்படுத்தியதல்ல என்றும், தீவின் சுற்றுலா வருவாய் மற்றும் அதனை சார்ந்த பணப்பரிவர்த்தனைகள் குறைவதால், பொருளாதாரச் சரிவு பெருமளவில் குறைத்தது என்றும் கூறினார்.


Source - Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News