மின்சாரம், எரிபொருள், சமூக வலைதளம் இல்லை - அவசரநிலை பிரகடனத்தில் 'ராவண தேசம்'
By : Mohan Raj
அவசரநிலையை அமல்படுத்திய பின்னர் இலங்கை சமூக ஊடக தளங்களைத் தடுக்கிறது, மக்கள் போராட்டங்களால் ராவண தேசம் திணறி வருகிறது.
இலங்கை அரசாங்கம் இரண்டு தினங்களாக மக்கள் போராட்டம் அதிகமாக நடைபெற்றதை தொடர்ந்து, வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களைத் தடைசெய்தது, நாடு தழுவிய பொது அவசரநிலையை அறிவித்து 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை விதித்தது, இலங்கை நாட்டில் மோசமான பொருளாதார நெருக்கடி குறித்து அரசை எதிர்த்து மக்கள் போராடிவிட கூடாது என்ற காரணத்தால் இந்த நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
பல மணிநேர மின்வெட்டுக்கு மத்தியில் உணவு, அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருள் மற்றும் மருந்துப் பற்றாக்குறையினால் அவதிப்படும் பொதுமக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கத் தவறியதைக் கண்டித்து கொழும்பில் மக்கள் கூடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஒரு செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இணையப் பாதுகாப்பு மற்றும் இணையத்தின் நிர்வாகத்தை கண்காணிக்கும் கண்காணிப்பு அமைப்பான NetBlocks, இலங்கையில் Facebook, Twitter, WhatsApp, Viber மற்றும் YouTube உள்ளிட்ட பல சமூக ஊடக தளங்களை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு கட்டுப்படுத்துவதை உறுதிப்படுத்தியது இலங்கை அரசு. டயலொக், ஸ்ரீலங்கா டெலிகொம், மொபிடெல், ஹட்ச் உள்ளிட்ட இலங்கையின் அனைத்து முக்கிய நெட்வொர்க் ஆபரேட்டர்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டும் ஆதாரங்களும் நாடு முழுவதும் சேவை கிடைக்காத வாடிக்கையாளர் எண்ணிக்கையை இந்த தகவல் உறுதிப்படுத்துகிறது.
ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம், டோக்டாக், ஸ்னாப்சாட், வாட்ஸ்அப், வைபர், டெலிகிராம் மற்றும் ஃபேஸ்புக் மெசஞ்சர் போன்ற சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி வெளியிடும் தளங்களில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் மோசமாகக் கையாள்வதற்கு எதிராக இலங்கை நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய போராட்டங்களுக்குத் மக்கள் தயாராக உள்ளதாக தகவல் அனுப்பியது. அங்கு மக்கள் தற்போது நீண்ட மணிநேர மின்வெட்டு மற்றும் அத்தியாவசியப் பற்றாக்குறையை சந்தித்து வாழ்கிறார்கள். ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவது மட்டுமே தற்பொழுது குடிமக்கள் போராட்டங்களை நடத்துவதைத் தடுக்கும் எனவும் கோத்தபய அரசு நினைக்கிறது.
இலங்கையில் ஏப்ரல் 1 முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது அவசரநிலையை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே வெள்ளிக்கிழமை இரவு விசேச வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார். சனிக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (ஏப்ரல் 4) காலை 6 மணி வரை 36 மணி நேர ஊரடங்கு உத்தரவையும் அரசாங்கம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடக ஆர்வலரான தனது மகன் போலீசாரால் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கையை சேர்ந்த குடிமகன் ஒருவர் சனிக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார். 'அனுருத்த பண்டார' எனப்படும் சமூக ஆர்வலரின் தந்தை, கடந்த வெள்ளிக்கிழமை இரவு வடக்கு கொழும்பு மொதெர போலீஸ் நிலையத்தில் இருந்து தனது மகனை யாரோ அழைத்துச் சென்றதாகக் கூறினார். காவல்துறையின் கூற்றுப்படி, அவரது சமூக ஊடக நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்ற குற்றச்சாட்டுடன் ஞாயிற்றுக்கிழமை, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இலங்கை தற்போது வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. எரிபொருள், சமையல் எரிவாயு, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, நீண்ட நேரம் மின்வெட்டு போன்றவற்றால் பொதுமக்கள் பல வாரங்களாக அவதிப்பட்டு வருகின்றனர். ராஜபக்ச தனது அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பாதுகாத்து, அன்னியச் செலாவணி நெருக்கடி தாம் ஏற்படுத்தியதல்ல என்றும், தீவின் சுற்றுலா வருவாய் மற்றும் உள்நாட்டு பணப்பரிவர்த்தனைகள் குறைவதால், பொருளாதாரச் சரிவு பெருமளவில் தொற்றுநோயாக மாறியது என்றும் குறிப்பிட்டார்.