Kathir News
Begin typing your search above and press return to search.

மஹாராஷ்டிரத்தில் மசூதியில் கட்டப்பட்ட கூம்பு வடிவ ஸ்பீக்கர்களுக்கு எதிர்ப்பு - நவநிர்மான் சேனா எச்சரிக்கை

மஹாராஷ்டிரத்தில் மசூதியில் கட்டப்பட்ட கூம்பு வடிவ ஸ்பீக்கர்களுக்கு எதிர்ப்பு - நவநிர்மான் சேனா எச்சரிக்கை

Mohan RajBy : Mohan Raj

  |  4 April 2022 7:45 AM GMT

மகாராஷ்டிர நவநிர்மான் சேனா (எம்.என்.எஸ்) மும்பையில் காட்கோபரில் உள்ள தனது அலுவலகத்தில் நிறுவப்பட்ட ஒலிபெருக்கிகளில் இருந்து அதிக டெசிபல்களில் 'ஹனுமான் சாலிசா' ஒலிபரப்பியதை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் 2 ஏப்ரல் 2022 அன்று தனது கட்சியின் வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறுகையில் மசூதிகளுக்கு கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவது குறித்து ராஜ் தாக்கரே கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அப்போது பேசிய அவர், 'மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றால், மசூதிகளின் முன் இரட்டை ஒலிபெருக்கிகளை வைத்து 'ஹனுமான் சாலிசா'வை ஒலிபரப்ப போவதாக ராஜ் தாக்கரே தனது கடுமையான பாணியில் எச்சரித்தார்.

மேலும், மும்பையின் குடிசைப் பகுதிகளில் உள்ள மசூதிகள், மதரசாக்களை போலீஸார் முறையாகச் சோதனையிட்டால் பல விஷயங்கள் தெரியவரும் என்றும் அவர் கூறினார். மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பிற இடங்களின் மாறிவரும் மக்கள்தொகையை அடிக்கோடிட்டுக் காட்டினார், மேலும் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் இங்கு வந்து குடியேறியுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

ராஜ் தாக்கரே கூறும்போது, "ஒருவரின் பிரார்த்தனை உரிமையை நான் எதிர்க்கவில்லை, ஆனால் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். அவற்றை அகற்றுமாறு அரசை கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால், அந்த மசூதிகளுக்கு முன்பாக ஹனுமான் சாலிசாவைக் கோஷமிட இரட்டை ஒலிபெருக்கிகளை வைப்போம் என்று நான் இப்போதே சொல்கிறேன் என்றார்.

இதன் விளைவாக MNS அலுவலகத்திற்கு வெளியே மரத்தில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டிருப்பது வீடியோவாக வெளியாகியுள்ளது. ANI நிறுவனம் பகிர்ந்த அந்த வீடியோ சமீபத்தில் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. "அஸானுக்காக ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால், மசூதிகளுக்கு வெளியே உள்ள ஒலிபெருக்கிகளில் ஹனுமான் சாலிசாவை ஒலிபரப்புவோம் என எம்.என்.எஸ் தலைவர் ராஜ் தாக்கரே எச்சரித்த சில நாட்களில் இது போன்ற சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மஹாராஷ்டிராவில் மதரஸாவில் கட்டப்பட்டுள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

"எந்த மதம் ஒலிபெருக்கியைக் குறிப்பிடுகிறது? உங்கள் மதம் கண்டுபிடிக்கப்பட்டபோது ஏதேனும் ஒலிபெருக்கி இருந்ததா? என மதரஸாக்களுக்கு ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.


Source - Opindia.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News