Kathir News
Begin typing your search above and press return to search.

இன்னும் ஒரு மாதத்தில் எல்.ஐ.சி'யின் ஐ.பி.ஓ வெளியீடு - மே மாதம் முதல் பங்குசந்தையில் எல்.ஐ.சி

இன்னும் ஒரு மாதத்தில் எல்.ஐ.சியின் ஐ.பி.ஓ வெளியீடு - மே மாதம் முதல் பங்குசந்தையில் எல்.ஐ.சி

Mohan RajBy : Mohan Raj

  |  6 April 2022 9:30 AM GMT

எல்.ஐ.சி பங்குகளை சந்தையில் வெளியிடும் ஐ.பி.ஓ வரும் மே 12'ம் தேதிக்கு முன் தொடங்கப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன.


லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் (எல்.ஐ.சி) ஐ.பி.ஓ எனப்படும் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடுகள் வரும் மே மாத தொடக்கத்தில் தொடங்கப்படும் என மனிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது. சி.என்.பி.சி-டிவி18 அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்களின்படி, ரெட் ஹெர்ரிங் ப்ரோஸ்பெக்டஸ் (ஆர்.ஹெச்.பி) தொடர்பாக வங்கியாளர்கள் மற்றும் நிதி ஆலோசகர்களுடன் அரசாங்கம் தொடர்பில் இருப்பதாகவும், இதனால் விரைவில் எல்.ஐ.சி பங்குகள் வெளியிடும் வேலைகள் முடிவுறவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பட்டியலிடுவதற்கு முன்னதாக, முதலீட்டுச் சந்தைகள் கட்டுப்பாட்டாளரான செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவிடம் (SEBI) ஒரு நிறுவனத்தால் தாக்கல் செய்யப்படுகிறது. அறிக்கையின்படி, எல்.ஐ.சி'யில் அதன் 5 சதவீத பங்குகளை ஐ.பி.ஓ மூலம் விற்க அரசாங்கம் முன்வரலாம் எனவும் , செபியிடம் தாக்கல் செய்யப்பட்ட ரெட் ஹெர்ரிங் ப்ரோஸ்பெக்டஸ் (டி.ஆர்.ஹெச்.பி) வரைவு படி, அரசாங்கம் எல்.ஐ.சி'யின் 31 கோடிக்கும் அதிகமான பங்குகளை விற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விநியோகத்தை அடிப்படையில் அளவில் 10 சதவீதம் வரை பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் முன்னரே தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. "செபியிடம் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஐ.பி.ஓ தொடங்க மே 12 வரை எங்களுக்கு ஒரு அனுமதி உள்ளது எனவும், தற்போது பங்குசந்தையில் நிலவும் நிலையற்ற தன்மையை நாங்கள் கவனித்து வருகிறோம், விரைவில் RHP ஐப் பிரைஸ் பேண்டைக் கொடுத்து தாக்கல் செய்வோம்," என்று வளர்ச்சிகளை அறிந்த அதிகாரி ஒருவர் அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளார்.

ஐ.பி.ஓ மே 12'க்கு அப்பால் தள்ளப்பட்டால், அரசாங்கம் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவிடம் (செபி) புதிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. LIC'யின் ஐ.பி.ஓ வெளியீடு தொடங்கும் பட்சத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் LIC'யின் பங்குகளை வாங்க துவங்கலாம். விரைவில் IRCTC, COAL India போன்று LIC'யிலும் பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம்.



Source - Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News