Kathir News
Begin typing your search above and press return to search.

அம்பேத்கர் சித்தாந்த வாரிசாக பா.ஜ.க. வாழ்ந்து வருகிறது: திருமாவளவனுக்கு சாட்டையடி கொடுத்த அண்ணாமலை!

அம்பேத்கர் சித்தாந்த வாரிசாக பா.ஜ.க. வாழ்ந்து வருகிறது: திருமாவளவனுக்கு சாட்டையடி கொடுத்த அண்ணாமலை!
X

ThangaveluBy : Thangavelu

  |  15 April 2022 2:25 AM

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு ஏற்பட்டு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது விசிக கும்பல் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை நடத்தியது. இதில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில் இது பற்றி தகவலை பகிர்ந்தார். அதாவது கும்பலான பாஜகவினரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். புரட்சியாளர் அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைக்கு நேரெதிரான சனதான கொள்கையைக் கொண்ட பாஜகவினருக்கு அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அருகதை இல்லை. இந்த நாடக அரசியலை மக்களிடம் அம்பலப்படுத்துவோம் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாலை தனது ட்விட்டர் பதிவில் சாட்டையடி கொடுத்துள்ளார். இது பற்றிய அவரது பதிவில் கூறியிருப்பதாவது: அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்த வாரிசாக பாரதிய ஜனதா கட்சி இன்று வாழ்ந்து காட்டி கொண்டிருக்கிறது.

எத்தனை காலம் மக்களை உங்களுடைய பொய் புரட்டுகளை வைத்து ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள்?

நீங்கள் சொல்லுகின்ற நேரத்திலே, சொல்லுகின்ற இடத்திலே தமிழக பாஜக சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வாழ்க்கை சித்தாந்தம் எப்படி பாரதிய ஜனதா கட்சியின் இன்றியமையாத சித்தாந்தமாக மாறி இருக்கிறது?

எப்படி நம்முடைய பாரத பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் அவருடைய வாழ்க்கையை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வகுத்து கொடுத்த பாதையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று எடுத்துரைக்க நான் தயாராக வருகின்றேன்.

இடத்தையும் நேரத்தையும் நீங்கள் கூறுங்கள்!

நன்றி. வணக்கம். இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Twiter

Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News