Kathir News
Begin typing your search above and press return to search.

பாரதியார் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? முண்டாசு கவிஞனையும், அவர் சொன்ன தேசியத்தையும் பிடிக்கவில்லையா? அண்ணாமலை கேள்வி!

பாரதியார் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? முண்டாசு கவிஞனையும், அவர் சொன்ன தேசியத்தையும் பிடிக்கவில்லையா? அண்ணாமலை கேள்வி!
X

ThangaveluBy : Thangavelu

  |  15 April 2022 2:26 AM GMT

மகாகவி பாரதியார் சிலை சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திறந்து வைத்தார். இந்த சிலை திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்பவன் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை தவிர்த்து மற்றவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

தமிழுக்காக தன்னை அர்ப்பணித்தவர் மகாகவி பாரதியார். ஆனால் போலியாக தமிழ் என்று சொல்லிக்கொள்ளும் அரசியல் கட்சிகளின் சுயரூபத்தை தமிழக மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். சும்மா வாயால் தமிழ் என்று சொல்பவர்களுக்கும் உண்மையாக நேசிப்பவர்களுக்கும் நேற்றைய ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவை சாட்சி ஆகும்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மகாகவி பாரதியார் சிலையை 'நம் இல்லம்' நிகழ்ச்சியில் ராஜ்பவனில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இன்று (ஏப்ரல் 14) திறந்து வைத்தார். இதில் கலந்து கொள்ள, ஒப்புதல் அளித்த நமது தமிழக முதல்வர் வருகை தரவில்லை. காரணம் என்ன? முண்டாசு கவிஞனையும், அவர் சொன்ன தேசியத்தையும் பிடிக்கவில்லை? இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News