"இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டால் யாரையும் விட்டு வைக்காது" சீனா'விற்கு எச்சரிக்கை விடுத்த ராஜ்நாத்சிங்
By : Mohan Raj
"இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டால் இந்தியா யாரையும் விட்டு வைக்காது" என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற இந்தியா, அமெரிக்கா அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹவாயில் உள்ள அமெரிக்க ஆயுதப் படைகளின் ஒருங்கிணைப்பாளர் indo-PACOM தலைமையகத்திற்கு சென்றார். அதனை தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங் இந்தியா-சீனா இடையே லடாக் எல்லையில் நடந்த தாக்குதல் பற்றி பேசியபோது கூறியதாவது, "இந்திய வீரர்கள் என்ன செய்தார்கள், நாங்கள் எந்த மாதிரியான முடிவுகளை எடுத்தோம் என்பதை எல்லாம் என்னால் வெளிப்படையாக சொல்ல முடியாது. ஆனால் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டால் இந்தியா யாரையும் விட்டு வைக்காது என்ற செய்தி மட்டும் சீனாவுக்கு சென்றுள்ளது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்" என்றார்
தொடர்ந்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இந்தியா ஒரு நாட்டுடன் நல்லுறவில் இருப்பதால் பிற நாட்டுடனான இந்தியாவின் உறவு மோசமடையும் என அர்த்தமில்லை இது போன்றவற்றை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொண்டதும் இல்லை, அதை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை இந்த மாதிரியான சர்வதேச உறவுகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை இரு நாடுகளுக்கு இடையிலான உறவென்பது இரு தரப்புக்கும் வெற்றி என்ற அடிப்படையில் இருப்பதையே இந்தியா விரும்புகிறது" என கூறினார்.
இந்தியா சீனா எல்லையில் நடந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தது குறித்து இராணுவ பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கு இடையே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.