Kathir News
Begin typing your search above and press return to search.

'சரியான ஆளைத்தான் பா.ஜ.க'வுக்கு தலைவராக போட்டிருக்காங்க' - அண்ணாமலையை புகழ்ந்த பாக்கியராஜ்

சரியான ஆளைத்தான் பா.ஜ.கவுக்கு தலைவராக போட்டிருக்காங்க - அண்ணாமலையை புகழ்ந்த பாக்கியராஜ்
X

Mohan RajBy : Mohan Raj

  |  20 April 2022 5:30 PM IST

'சரியான ஆளைத்தான் பா.ஜ.க'வுக்கு தலைவராக போட்டிருக்காங்க' என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் 'மோடி போன்று பிரதமர் நாட்டுக்கு தேவை' என பிரதமர் மோடியையும் திரைப்பட நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் பாராட்டி பேசியுள்ளார்.


'பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள்-புதிய இந்தியா 2022' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது, நிகழ்வில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பாக்யராஜ் கூறியதாவது, "அண்ணாமலை இங்கிருந்து கர்நாடகா சென்று சிறப்பாக பணியாற்றியதாக சொன்னார்கள் நான் கர்நாடகா சென்று இருந்தபோது அவரைப் பற்றி பெருமையாக பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது இது பாராட்டப்பட வேண்டியது பா.ஜ.க'வுக்கு சரியான ஆளைத்தான் தலைவராக போட்டிருக்கிறார்கள், பிரதமரின் திட்டங்கள் குறித்து இந்த புத்தகத்தை பெறுவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன்" என்றார்.

"பிரதமர் இத்தனை நாடுகளுக்கு ஓய்வு இல்லாமல் எப்படி செல்கிறார் அவர் உடலை எப்படி வைத்துக் கொள்கிறார் என நான் பார்ப்பேன், இந்தியாவுக்கு இப்படி உரையாற்றிய பிரதமர் தேவை இக்கட்டான சூழல் வரும் பொழுது சமாளிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம் எப்படி சென்றாலும் விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது" என பேசியுள்ளார்.


Source - News 18 tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News