ரேசன் கடையில் பிரதமர் மோடி படம் அகற்றிய விவகாரம் - பா.ஜ.க, தி.மு.க.வினர் இடையில் மோதல்!
By : Thangavelu
ரேசன் கடைகளில் பாஜகவினர் பிரதமர் மோடியின் படத்தை வைத்து வருகின்றனர். மத்திய அரசு சார்பில் இலவசமாக அரிசி, கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. இதனை தமிழக மக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி முதன் முதலாக அவர் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், திருச்சி புறநகர் பகுதியில் செயல்பட்டு வரும் ரேசன் கடையில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வைப்பதற்காக பாஜக மண்டல தலைவர் பரமசிவன் தலைமையில் சென்று பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்தனர். அப்போது அங்கு வந்த கவுன்சிலர் ராம்தாஸ் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினருக்கு மோதல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த அங்கு சென்ற போலீசார் இருவரிடமும் சமாதானம் செய்ய முற்றபட்டனர். ஆனால் பாஜக மண்டல தலைவர் தன்னை தாக்கியதாக கூறினார். இதனை அறிந்த பாஜக மாவட்ட தலைவர் மற்றும் தொண்டர்கள் ரேசன் கடை முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
Source, Image Courtesy: Thanthi Tv