Kathir News
Begin typing your search above and press return to search.

ஏழைகளின் பங்காளன் 'நல்லக்கண்ணு' - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!

ஏழைகளின் பங்காளன் நல்லக்கண்ணு - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!
X

ThangaveluBy : Thangavelu

  |  26 April 2022 7:15 PM IST

கம்யூனிஸ்ட் கட்சியின் மிகவும் மூத்த தலைவர் நல்லகண்ணுவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

தமிழகத்தில் மிகவும் மூத்த அரசியல் கட்சியின் தலைவராக உள்ளவர் நல்லக்கண்ணு. இவர் பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் மூத்த தலைவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து நலம் விசாரித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஏழைகளின் பங்காளன் நல்லகண்ணு அய்யாவை இன்று பாஜக தலைவர்களுடன் சென்று சந்தித்தோம். ஐயாவின் மருமகன் சமீபத்தில் இறைவனடி சேர்ந்தார் அதற்காக எங்களுடைய வருத்தங்களை தெரிவித்து, அய்யாவின் உடல்நலத்தையும் விசாரித்து விட்டு வந்தோம்! இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News