Kathir News
Begin typing your search above and press return to search.

"ராமருக்கு அனுமன் போல் தி.மு.கவிற்கு உதயநிதி" - ஏ.வ வேலுவின் புகழ் பாடல்!

ராமருக்கு அனுமன் போல் தி.மு.கவிற்கு உதயநிதி - ஏ.வ வேலுவின் புகழ் பாடல்!
X

DhivakarBy : Dhivakar

  |  29 April 2022 9:18 AM GMT

சென்னை : தமிழக சட்டப்பேரவையில், கடந்த சில தினங்களாக எம்.எல்.ஏ உதயநிதியின் அன்பைப் பெற, அமைச்சர்கள் மற்றும், சட்டமன்ற உறுப்பினர்கள் போட்டி போட்டுகொண்டு உதயநிதியை போற்று பாடி வருகின்றனர்.


"சட்டப்பேரவையில் அமைச்சர்களும் எம்.எல்.ஏ'க்களும் புகழ்பாடி நேரத்தை விரயம் செய்யாமல் உரையாற்ற வேண்டும்" என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பலமுறை அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ'க்களுக்கும் கூறிவிட்டார். ஆனாலும் புகழ் பாடல் ஓய்ந்ததாக தெரியவில்லை.


சட்டப்பேரவையில் இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் குறித்து " சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை! திருவல்லிக்கேணியின் தங்கப்பிள்ளை! மாண்புமிகு அண்ணன் உதயநிதி அவர்களை வணங்குகிறேன்!" என்று உதயநிதி ஸ்டாலின் நெஞ்சில் இடம் பெற நீண்ட பக்க கவிதை ஒன்றை வாசித்தார்.


இதைத்தொடர்ந்து, அடுத்துவரக்கூடிய வாய்ப்புகளில் அமைச்சர்களும் எம்.எல்.ஏக்'களும் உதயநிதி புகழ் பாட ஆரம்பித்துவிட்டனர்.


அதில் அமைச்சர் ஏ.வ வேலு "ராமனுக்கு அனுமன் போல, ராஜராஜ சோழனுக்கு ராஜேந்திர சோழன் போல தி.மு.க ஆட்சியமைக்க முதல்வருக்கு உறுதுணையாக இருந்தவர் உதயநிதி" என்று தன் பங்குக்கு புகழ் பாடினார்.


"ஒரு கல் ஒரு கண்ணாடி' ஆனால் நீங்கள் வீசிய ஒரு செங்கல் கடந்த ஆட்சியை அல்லவா உடைத்து வீழ்த்தியது. நீங்கள் நடித்த படம் கெத்து. நீங்கள்தான் தமிழகத்தில் சொத்து. எதிரிகளை தனது சிரிப்பால் நண்பேண்டா என்று சொல்ல வைக்கும் நீங்கள் உங்கள் நடிப்பில் உருவானதோ மனிதன், நிஜத்தில் நீங்கள் தான் மாமனிதன்." என்று அமைச்சர் பி மூர்த்தி தன் பங்குக்கு உதயநிதிக்கு புகழுரை பாடினார்.


முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மீண்டும் மீண்டும் எச்சரித்தும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ'க்களும் சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வ உரைகளை நிகழ்த்தாமல். புகழுரைகள் தொடர்ந்து வருவது, வருத்தத்துக்குரியது.


One India


Next Story
கதிர் தொகுப்பு
Trending News