மக்களை ஏமாற்றுவதுதான் 'திராவிட மாடல்' ஆட்சி - தி.மு.க.வை பங்கம் செய்த எடப்பாடி பழனிசாமி!
By : Thangavelu
ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தலைமை செயலகத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி விட்டதாக பொய்யான விளம்பரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனே நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முதல் கையெழுத்து போடுவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் தேர்தல் சமயங்களில் கூறினர். இதுவரை ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்து விட்டது. ஆனால் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. மகளிர் பேருந்துகளில் இலவசமாக செல்லலாம் என்றனர். ஆனால் சென்னை மாநகரில் 33 சதவீத பேருந்துகளில் மட்டுமே செல்கின்றனர்.
மக்களை ஏமாற்றுவதற்கு தேர்தல் சமயங்களில் ஒரு அறிவிப்பு, தேர்தல் முடிந்த பின்னர் ஒரு அறிவிப்பு. இதுதான் உங்களின் திராவிட மாடலா? தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது, விலை வாசியும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. இது போன்று பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar